Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு; இலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது!

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து, முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டு சிறிலங்கா ஜனாதிபதி விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியடைவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா ஜனாதிபதிக்கு இல்லை என்று தலைமை நீதியரசர் உள்ளிட்ட சிறிலங்கா உச்ச நீதிமன்றின் ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
இந்த கால வரையரைக்கு முன்னதாக ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்த கலைக்க வேண்டும் என்ற தேவை எழுந்தால் அதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஆதரவுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் டிசெம்பர் 13 ஆம் திகதியான இன்றைய தினம் மாலை விடுத்த தீர்ப்பில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை சில அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர், தற்போது குறித்த தீர்ப்புத்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது, உச்ச நீதிமன்றின் குறித்த தீர்ப்பு இலங்கையில் இன்னும் ஜனநாயாகம் இருக்கின்றது என்பதை மக்களுக்கு உணர்த்தியிருப்பதோடு, யார் தவறு செய்தாலும் தவறுதான் என்பதை அரசியல்வாதிகளுக்கு உரக்க சொல்லியிருக்கின்றது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

Post a Comment

0 Comments