Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெளியானது அமைச்சரவை இழுபறிக்குரிய காரணம்!


சிறிலங்காவில் ரணில் தலைமையிலான அமைச்சரவை அமைப்பதற்கு பல்வேறுபட்ட சிக்கல் நிலைகள் மற்றும் இழுபறி நிலைகள் தொடர்வதாக உள்மட்டத் தகவல்கள் வெளியாகியவண்ணமுள்ளன.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான சிலரை அமைச்சர்களாக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரங்களில் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வழங்கிவந்தவர்கள்மீதே இந்த எதிர்ப்பு நிலை தோன்றியுளதாக தெரியவந்துள்ளது.

இதேபோல சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவிய உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான உறுப்பினர்கள் எதிர்ப்பினைக் காட்டிவருகின்றனர்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணநாயக்கவுக்கு நிதியமைச்சு பொறுப்பை வழங்குவதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு நிலை தோன்றியுள்ளதுடன் டி.எம் சுவாமி நாதனுக்கு மீள்குடியேற்ற அமைச்சை வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது எதிர்ப்பினைக் காட்டிவருகிறது.

எவ்வாறாயினும் இன்றைய தினம் சில அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments