இன்றைய தினம் 20 புதிய அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய அமைச்சர்கள் நாளைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள அமைச்சர்களது பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் தெரித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை, 30 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடமளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களான மனோகணேசன், றிசாட் பதியுதீன் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் தங்களுக்கு அமைச்சுப் பொறுப்பு தேவையில்லை என்று அறிவித்துள்ளனர்.
அதேநேரம், 40 பேர் கொண்ட பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களும் இதற்குப் பின்னர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: