அடுத்த வருடம் மக்கள் தொடர்பான பெரும் பொருளாதாரத் திட்டம் ஒன்றை முன்வைக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் மருதானை, சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்படி கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் மக்கள் தொடர்பான பெரும் பொருளாதாரத் திடம் ஒன்றைக் கொண்டுவரப்போவதாகவும் இது மக்களுக்கு மென்மேலும் பயனுள்ளதாக அமையும் எனவும் ராஜித நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றி பெற்று 2025 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியமைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: