2018 ஆம் ஆண்டுக்கான 67 வது பிரபஞ்ச அழகிப்போட்டி, தாய்லாந்தில் உள்ள நான்தாபுரி மாநிலத்தில் உள்ள முவாங்தாங் எனும் நகரில் நடந்தது. 94 நாடுகளைச் சேர்ந்த 92 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில், இந்தியாவில் இருந்து மும்பையைச் சேர்ந்த நேஹல் சுதாஸமா என்ற பெண்ணும் பங்கேற்றிருந்தார்.
அரையிறுதிச் சுற்றில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து அதாவது அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக் ஆகியவற்றில் இருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இந்தியாவில் இருந்து சென்றிருந்த நேஹெல் சுதாஸமா அரையிறுதிச்சுற்றுக்கூட முன்னேறாமல் வெளியேறினார்.
அரையிறுதிச்சுற்றில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கோஸ்டா ரிகா, குராகோ, இங்கிலாந்து, ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, ஜமைக்கா, நேபாளம், பில்ப்பைன்ஸ், போலந்து, பியூரிட்டோ ரிகோ, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, வெணிசுலா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தகுதி பெற்றனர்.
இதில் முதல் 5 இடங்களில் வியட்நாம், பியூரிட்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், வெணிசுலா,தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தகுதி பெற்றனர். இவர்களிடையே நடந்த கடும் போட்டியில் 2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு செய்து மகுடம் சூட்டப்பட்டார்.
2 வது இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டமாரின் கிரீன் பெற்றார், 3 வது இடத்தை வெணிசுலாவின் ஸ்டெபானி கட்டர்ஸ் பெற்றார்.4 வது இடத்தை பியூரிட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த கியாரா ஓர்டேகாவும், 5 வது இடத்தை வியட்நாமின் ஹென் நிஹமும் பெற்றனர்.
0 Comments