ஜனவரி மாதம் முதல், நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை நேற்று அங்கிகாரம் வழங்கியிருந்த்து.
இடைக்கால கணக்கு அறிக்கையில் நான்கு மாதங்களுக்காக சுமார் ஆயிரத்து 765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை எதிர்வரும் வாரங்களில் சரி செய்யமுடியுமெனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
0 Comments