Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த நவரெத்தினராசா அரங்கன் அவர்கள் அகில இலங்கைக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகக் கொண்டு களுவாஞ்சிக்குடியில் வசித்துவரும் சிவஸ்ரீ. நவரெத்தினராசா அரங்கன் சர்மா அவர்கள் அகில இலங்கைக்கான சமாதான நீதவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி திரு. த.கருணாகரன்  அவர்களது முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மட்/பட்/ குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணி புரிந்து வருகின்றார்.
குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தை நிருவகிக்கும் திருவருள் ஆண்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளராக சேவையாற்றிய இவர் ஆன்மீக சேவையாளரும் சமூக சேவையாளரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments