Home » » வடக்கில் பலத்த மழை: காற்றுக் குறித்து அவதானமாக இருக்கவும்!

வடக்கில் பலத்த மழை: காற்றுக் குறித்து அவதானமாக இருக்கவும்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பினை இங்கு தருகின்றோம்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு வடக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |