மீண்டும் பணியாளர்களை ஏற்றிசென்ற புகையிரதம் தடம்புரண்டதால் மலையக புகையிரத சேவை மீண்டும் பாதிபபடைந்துள்ளது.
தலவாகலையில் இருந்து கொழும்பு பகுதியை நோக்கி பணியாளர்களை ஏற்றிசென்ற புகையிரதம் ஹட்டன் பகுதியில் வைத்து நேற்றய தினம் தடம்புரண்டமைக்கு பிறகு 25.11.2018.ஞாயிற்று கிழமை காலை 07 மணிக்கு மீண்டு வழமைக்கு திரும்பி கொழும்பு பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளை இன்று காலை 08மணி அளவில் ஹட்டன் மற்றும் ரொசல்ல பகுதிகளுக்கம் மிடையில் 67ம் இலக்க தூன் பகுதியில் மீண்டும் தடம் புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை இன்று காலையில் இருந்து தடைப்பட்டுள்ளதாக புகையிரத காட்டு பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் பதுளை - கொழும்பு கொழும்பு - பதுளைக்கான மலையக புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கபட்டுள்ளதாகவும் பணியாளர்களை கொண்டு சீர் செய்தவுடன் மலையகத்திற்கான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பலாம் என புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
0 Comments