Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வங்கக் கடலில் உருவாகும் தாழமுக்கம் - இலங்கையை நோக்கி நகரும் சாத்தியம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் விருத்தியடைந்து இலங்கையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் உள்ளதால், பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments