Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கூட்டமைப்பின் முடிவினால் மகிந்த தரப்பு கடும் கோபம்! - அம்பலப்படுத்தும் நாமலில் பதிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனுக்காகவே, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் சொந்த மக்களின் உண்மையான தேவைகள் குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுத்தாலும் சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் அது குறித்து கவலைப்படாமல் வடக்கு-கிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வார்கள். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் புனர்வாழ்வு குறித்தும் கவனம் செலுத்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு, மகிந்த தரப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments