தனக்கான பெரும்பான்மை நிரூபிப்பதற்காக, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு,மனைவியுடன் சென்று ஆதரவு கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
|
ஏ.எச்.எம்.பௌசியின் வீட்டுக்கு சென்ற மஹிந்த தம்பதியினர், புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன்போது புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறும் மஹிந்த அழைப்பு விடுத்தார்.எனினும் சரியான தீர்மானத்தை எடுக்கு கால அவகாசம் வழங்குமாறு மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதியாக புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பௌசி, தேசிய ஒற்றுமை, கூட்டுறவு மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.
|
0 Comments