Home » » ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி! - வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சபாநாயகர் கடிதம்

ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி! - வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சபாநாயகர் கடிதம்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என சபாநாயகர் கருஜெயசூரிய வர்ணித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விடயங்களை சதிப்புரட்சி என்றே வர்ணிக்கலாம் என ஐந்தாம் திகதி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள சபாநாயகர் துப்பாக்கிகளையும் டாங்கிகளையும் பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதி புரட்சி என குறிப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.
முழு விடயங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிறிசேன வெளிப்படைதன்மை, ஒழுக்கம் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றிற்கு மாறாக சிறிசேன நடந்து கொள்கின்றார் என தெரிவித்துள்ள கரு ஜெயசூரிய சிறிசேன தான் நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்த அரசமைப்பிற்கு முரணாக நடந்து கொள்கின்றார் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |