Advertisement

Responsive Advertisement

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்கள் : முழுமையாக


2018.11.05 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
  1. காலநிலை மாற்றத்தை கட்டுபடுத்துவதற்கான கூட்டுத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 5ஆவது விடயம்)
பசுமை வாயுவின் வெளிப்பாட்டை கட்டுபடுத்துவதற்காக உலக வங்கி நிதியுதவியின் கீழ் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துசதற்காக கூட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளினதும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த முக்கியஸ்தவர்களின் அனுபவத்துடனான திட்ட முகாமைத்துவ பிரிவை ஸ்தாபிப்பதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  1. இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகக் கட்டிடத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 06ஆவது விடயம்)
இலங்கை சமுத்திர வலய பாதுகாப்புத்தன்மை மற்றும் அந்த வலயத்தில் வாழ்வாதார நிலை மற்றும் சொத்துக்களை பாதுகாத்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடமைகளை மிகவும் செயல்திறன்மிக்கதாகவும் பயன் உள்ளதாகவும் மேற்கொள்ளக்கூடிய வகையில் அரசாங்க நிறுவனங்களுடன் சிறப்பான தொடர்புகளை முன்னெடுத்தல், கூட்டம்,மகாநாடு மற்றும் இரு தரப்பு உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொள்ளல் மற்றும் கரையோர பாதுகாப்பு பணிகள் மற்றும் நிருவாக நடவடிக்கையை கண்காணித்தல் போன்ற பணிக்ள உரிய வகையில் மேற்கொள்வதற்காக இந்த திணைக்களத்திற்கு அனைத்து வசதிகளையும் கொண்டதாக தலைமையகம் ஒன்றை கொழும்பு நகரத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்hக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  1. இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் வரையறுக்கப்பட்ட ஜய கொள்கலன் முனையத்திற்கு (டெமினல்) தனியார் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைக் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல். (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் வரையறுக்கப்பட்ட ஜய முனையத்திற்கு டெமினால் தனியார் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைக்கான கட்டணம் தற்போதைய சந்தை போட்டித்தன்மை மற்றும் சிறந்த சேவையை வழங்கக்கூடிய வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் துறைமுகங்களுக்கிடையில் தனித்தன்மை வாய்ந்த கட்டணமுறையை அறிமுகப்படுத்துவதற்காக துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  1. உணவுப்பயிர் மேலதிகம் மற்றும் தட்டுப்பாட்டை கட்டுபடுத்துவதற்கான பயிர கணிப்புக்கள் தொடர்பான தகவல் கட்டமைப்பை (CFIS) வலுவூப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 15ஆவது விடயம்)
நாடுமுழுவதிலும் உற்பத்திசெய்யப்படும் பயிர்களின் தன்மை பருவனால ரீதியில் அவற்றின் எதிர்பார்த்த உற்பத்தி பயிர்பாதிப்பு அறுவடை உள்ளிட்டவை குறித்த  தரவகளை உள்ளடக்கிய பயிர்களின் கணிப்பு அறிக்கை விவசாய திணைக்களத்தினால் செளியிடப்படுவதுடன் அந்தத் தரவு உணவு பயிர் இறக்குமதி உள்ளிட்ட காலத்தை தீர்மானிப்பதற்காக தற்பொழுது பயன்பாட்டில் இருப்பதை நம்பிக்கையான தரவு அடிப்படையாக கருதமுடியும். இந்தத் தரவு கட்டமைப்பு பயிர் கணிப்பு தகவல் கட்டமைப்புக்கு ((Crop Foreceasing Information system  – CFIS) என்ற மென்பொருள் தற்பொழுது பயன்படுத்தப்படுகின்றது. இந்த தரவு அடிப்படை மேலும் செயல் திறன்மிக்க மற்றும் பயனுள்ள வகையில் பயன்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வகையில் தற்பொழுது நாடு பூராகவும் உள்ளடக்கிய வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விவசாய சேவை மத்திய நிலையம் பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகம் மற்றும் மகாவலி வலய அலவலகம் ஆகியன கொண்டுள்ள வளங்களை பயன்படுத்தி மேம்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  1. இலங்கை விவசாய கல்லூரிகளில் வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 17ஆவது விடயம்)
இளம் சமூகத்தினரை விவசாயத்துறையில் ஈடுபடுத்துவதற்காக புதிய தொழில் நுட்பம் தொடர்பில் அவர்களுக்கு கல்வியை வழங்கி தேசிய தொழில் தகுதி (NVQ)  ஆறு மட்டத்திலான விவசாய டிப்ளோமா  தகுதியை பெற்றவர்கள் குண்டசாலை பெல்வேஹொர அகுணுகொலபெலச கரபிஞ்சா மற்றும் வவுனியா ஆகிய
பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஐந்;து விவசாய கல்லூரிகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளனர்.  இந்த விவசாயக் கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் விவசாய உற்பத்தி அளவு மற்றும் தரத்தை மேம்படுத்தமுடியும். இதனை   திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  1. கைவிடப்பட்ட கிராமத்திலுள்ள குளங்களை மீளசீர்செய்தல் (நிகழ்ச்சி நிரலில 18ஆவது விடயம்)
விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் சிறிய நீர்பாசன மற்றும் ஆரம்ப நீர் வளங்கள் தொடர்பான தரவுகளுக்கமைவாக தற்பொழுது 14421 குளங்களின் செயற்பாடு மிக்கதாக காணப்படுவதுடன் உள்ளகப் பிரச்சினை தொற்று நோய் பரவுதல் போன்றவற்றின் அடிப்படையில் 1958 கிராம குளங்கள் கைவிடப்பட்டிருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்தக் குளங்களை புனரமைப்பதன் மூலம் புதிதாக 97900 ஏக்கர் நிலப்பரப்பை உற்பத்திக்காக பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக தற்போது கைவிடப்பட்டுள்ள இந்தக் குளங்களை புனரமைப்பதன் மூலம் நிலத்துக்கடியிலான நீரை பயன்படுத்துதல் தற்பொழுது நிலத்திற்கு அடியிலுள்ள நீரை வளப்படுத்தல் வனவளத்தை மேம்படுத்தல் மற்றும் வனவிலங்குகளின் பயன்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும்  சேவைகளை கவனத்தில் கொண்டு மீண்டும் சீர்செய்யும் ஏற்புடையது என்பதினால் தொழில்நுட்ப ரீதியில் உறுதிசெய்யப்படும் குளங்களை புனரமைப்பதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  1. வடக்கு கிழக்கு விவசாய புத்துயிராக்கம் என்ற துரித விவசாய அபிவிருத்தி திட்ட நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய விவசாய அறுவடையை மேலும் மேம்படுத்தவதற்காக குறைந்த உற்பத்தி திறன் விதை தட்டுப்பாடு  காணிப்பயன்பாடுகளில் உள்ள பிரச்சினை காலநிலை மாற்றம் அறுவடை பின்னரான முகாமைத்துவத்தின் குறைபாடு விநியோகம் மற்றும் பெறுமதி சேர்த்தலில் நிலவும் சிரமங்கள் நீர் விநியோக பிரச்சினை குளங்களை புனரமைத்தல் மற்றும் விவசாய வழி முறைகளில் உள்ள பிரச்சினைகள் அடிப்படை வசதி குறைபாடு மற்றும் விவசாயத்துறைக்கான அதிகாரிகளின் பற்றாக்குறை போன்ற சவால்கள் களையப்பட வேண்டும் என்பது அடையாளங் காணப்பட்டுள்ளன. இதற்கமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களினால் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கப்படும் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் இந்தப் பிரதேசங்களில் வாழும் தொழில் தன்மையை மேம்படுத்துவதற்காக வடக்கு கிழக்கு விவசாய புத்துயிராக்கம் என்ற துரித விவசாய அபிவிருத்தி திட்ட நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளளது.
  1. பட்டினியை இல்லாதொழிப்பதற்கான இலங்கை தேசிய சாகினி நிவீமே என்ற சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
தற்பொழுது தொழில் நுட்ப மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்குப் பொருத்தமான வகையில் பட்டினியை இல்லாதொழிப்பதற்கான இலங்கை தேசிய சாகினி நிவீமே என்ற சபை சட்டம் சீர்த்திருத்தப்பட வேண்டும். இதற்கமைவாக இலங்கை தேசிய சாகினி நிவீமே  சபை என்ற சி;ன்னத்தை தேசிய உணவு மேம்பாடு மற்றும் விவசாய விற்பனை சபை என்று மாற்றுதல் மற்றும் இந்த சபையின் பொது நோக்கத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக திருத்த சட்டமூலம் தயாரிப்பதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  1. உயிர்த்திரள் எரிசக்தி 2022 ஆம் ஆண்டு என்ற பொருளாதார அபிவிருத்திக்காக உயிர்த்திரள் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்)
இலங்கையி;ன் மின்சக்தி தேவைக்காக எரிபொருள் நிலக்கரி போன்ற எரிபொருள் இறக்குமதிக்கு ஒதுக்கப்படும் வெளிநாட்டுநாணய செலவை  கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய சக்தி வளத்தை பிரபலப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் அடையாளங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக உயிர்த்திரள் (Biomass)  அல்லது தாவரங்களை சேகரித்தல் மற்றும் விநியோகித்தல் 50 மத்தியநிலையங்கள்  நாடு முழுவதிலும் அமைக்கப்படவுள்ளன. இதற்கமைவாக இதற்கான உற்பத்திக்காக புதிதாக 1000 தொழில் முயற்சியாளர்களை இத்துறை உற்பத்தியில் ஈடுபடுத்துதல்; விவசாய கழிவுப்பொருட்களை இதற்கான பொருட்களாக சமர்ப்பிப்பதற்கும் இதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்குமாக உயிர்த்திரள் எரிசக்தி 2022 ஆம் ஆண்டு என்ற பெயரிலான திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அரச தனியார் போன்று வெளிநாட்டு பிரிவு நிதிய ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டி அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளளது.
  1. சபரகமுவ பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 35ஆவது விடயம்)
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் பிரயோக  விஞ்ஞான பீடத்திற்காக உத்தேச புதிய கட்டிடத்தொகுதியில்
இரண்டாம் கட்ட நடவடிக்கையில் முதலாவது பிரிவு ரீதியில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள விஞ்ஞான கூடம் மற்றும் விரிவுரை மண்டப ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய அமெரிக்க டொலர் மில்லியன் 452.2 ரூபாவிற்கு சதுடு பில்டர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக  கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்  சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளளது.
11   அமைச்சரவையின் ஊடக  பேச்சாளர்களாக பெயரிடல் (  நிகழ்ச்சி நிரலில் 44 ஆவது விடயம்) 
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ   மகிந்த சமரசிங்க அவர்களையும் ஊடகத்துறை மற்றும்  டிஜிட்டல்  அடிப்படை வசதிகள் இராஜாங்க அமைச்சர்   கௌரவ கேலியரம்புக்வெல்ல அவர்களையும்       அமைச்சரவை பேச்சாளர்களாக   நியமிப்பற்கு  அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது..
அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது..

Post a Comment

0 Comments