Home » » அம்பாறை மாவட்ட தமிழ் , முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்துவோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் , முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்துவோம்.


காரைதீவு முஸ்லிம் பிரிவு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளருமான ஏ.எம்.ஜாஹிர்
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
நாட்டின் தற்போதய நிலமையறிந்து அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் மேற்கொண்ட தீடீர் மாற்றத்தின் காரணமாக இலங்கை ஜனநாயக குடியரசின் பிரதம மந்திரியாக மிகவும் திறமைவாய்ந்த மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு குட்டிச்சுவராக தொடர்ந்தும் மாற எவரும் துணைபோகக்கூடாது. மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதம மந்திரியாக தனது பணியை  தொடர அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்குவதுடன் தாம் சார்ந்த அரசியல் பிரமுகர்களுக்கும் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மாளிகைக்காடு பிரதேச  இளைஞர்களின் மத்தியில் தற்போதய நாட்டின் அரசியல் நிலமை தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடலின் போது காரைதீவு முஸ்லிம் பிரிவு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளருமான ஏ.எம்.ஜாஹிர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நல்லாட்சி அரசின் மூலம் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டு பயணிக்கும் இந்த பயணத்தால் நாடு பின்னோக்கிய நிலையிலேயே சென்று கொண்டிருக்கின்றது. நாட்டில் வறுமைக்கோட்டிக் கீழ் வாழும் மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு பலவிதமான கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எரிபொருட்களின் விலை இரவோடு இரவாக அதிகரிப்பதனால் எல்லாவகையான பொருட்களும் போக்குவரத்து செலவுகளும் விஷம் போல் ஏறிவிட்டது. பொது மக்களிடையே இந்த அரசின் மீது வெறுப்பு தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்த நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே ரணில் விக்ரமசிங்கவிடமிருந்த பிரதம மந்திரி பதவியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி வழங்கி வைத்தார். இதனால் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் சந்தோசமாக இருப்பதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. வாழ்க்கையை தொடர முடியாமல் நுன்கடன்களைப் பெற்று அவற்றை கட்டமுடியாமல் பலர் அண்மைக்காலங்களில் தற்கொலை புரிந்து வருவதனை எல்லோரும் அறிவீர்கள். தொழில்வாய்பின்றி இளைஞர்களும் யுவதிகளும் விரக்தியின் உச்சக் கட்டத்திற்கு சென்றுவிட்டனர். பொருளாதார ரீதியாக மிகவும் கஸ்டமான நிலைக்கு மக்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை தொடருமானால் பட்டினியாலும் பசியாலும் அனைவரும் உயிரிழக்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நல்லாட்சி அரசில் கடந்த கால மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி பணிகளில் மூன்றில் ஒரு பகுதி கூட இடம்பெறவில்லை. அதிலும்  குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப்பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இதுவரை எந்த விதமான குறிப்பிடத்தக்க அபிவிருத்தி பணிகளும் இடம்பெறவிவல்லை. அரசியல்வாதிகள் மட்டும் தம்மை வளப்படுத்திக் கொண்டுள்ளார்களே தவிர  வாக்களித்த அப்பாவி மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போதுள்ள குழப்பமான அரசியில் சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக புதிய பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு எம்மிடம் உண்டு.
ஒரு உறையினுள் ஒரு கத்தியே இருக்க வேண்டும். ஒரு உறையினுள் இரண்டு கத்திகளை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது.  தேர்தல் காலங்களில் பொய்வாக்குறுதிகளை தேர்தல் மேடைகளில் வாய்கிழிய வழங்கி விட்டு ஆட்சிப்பீடமேறிய பின் வாக்காளர்களை கால்களால் ஒத்தி வீசுவதனை எவராலும் அனுமதிக்க முடியாது.
நாட்டின் எதிர்கால நன்மை கருதியும் எமது எதிர்கால சந்ததியினர் தங்குதடையின்றி வாழவும் பாரிய அபிவிருத்தி பணிகளை  மேற்கொள்ளவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின்  எண்ணத்தை வெற்றியடைய செய்யவும் புதிய பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பக்க பலமாக இருப்போம்.
என்று தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |