Home » » 113ஐ பெற்றுவிட்டோம் : ஜனாதிபதி அறிவிப்பு

113ஐ பெற்றுவிட்டோம் : ஜனாதிபதி அறிவிப்பு


நாங்கள் 113ஐ பெற்றுவிட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் கொழும்பில் நடைபெற்ற புதிய அரசாங்கத்திற்கு ஆதரவான பொதுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

அவரின் உரையின் சாரம்சம் வருமாறு.

* மஹிந்தவுடன் 4 வருடங்களின் பின்னர் அதுவும் நவம்பர் மாதம் இணைந்ததில் மகிழ்ச்சி…

* ரணிலை நீக்கி மஹிந்தவை பிரதமராக அரசியலமைப்பின்படி நியமித்தமை இரண்டு உருவங்கள் மாற்றம் அல்ல… நாட்டுக்கு உசிதமற்ற ஒருவரை நீக்கி சரியான ஒருவரை கொண்டுவந்தேன்..

* பிரதமர் பதவியை ஏற்குமாறு நான் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கேட்டேன்.. காலில் விழாத குறையாக கேட்டேன்.. ஆனால் ஒரு நாள் அவர் ரணிலுடன் என்னிடம் வந்து இவருக்கு எதிராக எப்படி வருவது என்று என்னிடமே கேட்டார்…

* அதேபோல் சஜித் பிரேமதாசாவை இரண்டு மாதங்கள் சந்தித்து பேசினேன்… அவரும் தலைவருடன் ( ரணிலுடன்)மோத முடியாது என்று என்னிடம் கூறினார்…

* கரு மற்றும் சஜித் இயலாதென கூறிய பிரதமர் பதவியை ரணிலை முட்டி மோதிக் கொண்டு போகக் கூடிய மஹிந்தவிடம் வழங்க நான் தீர்மானித்தேன்..

* வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் வேலை செய்ய முடியாது..

* அரசின் தீர்மானங்களை எடுத்தது ரணிலை சுற்றி இருந்த ஒரு கூட்டம் தான்… இப்போது தூதரகங்கள் முன்னால் விழுந்து கிடக்கின்றனர்.. ரணில் தூதுவர்கள் காலில் விழுந்து கிடக்கிறார் ..

* நான் தனி தீர்மானம் எடுக்கவில்லை… சட்ட வல்லுனர்களுடன் பேசி ஆராய்ந்தே எடுத்தேன்… எல்லாம் அரசியலமைப்பின்படியே நடந்தன ..

இதில் சர்ச்சை இருந்தால் யாரும் உயர்நீதிமன்றம் செல்ல முடியும்..

* வடக்கின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்..

வீடமைப்பு திட்டத்தை வடக்கில் செய்ய அமைச்சர்கள் கடந்த அரசில் சண்டை… ஒரு வீடு கூட கட்டப்படவில்லை.. அதை செய்வோம்..

* 113 பெரும்பான்மை உறுதியாகி விட்டது. அதைப்பற்றி கவலை வேண்டாம்…

* 70 வீதமான நாட்டு மக்கள் நான் எடுத்த முடிவு சரி என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.. யாரும் அதனை மறுத்து செயற்பட நினைக்க வேண்டாம்..

* இந்திய அரசை என்னுடன் பிரிக்க ரணில் சதி வேலை செய்கிறார்.. அமைச்சரவை விடயங்களை வெளியில் திரித்து கூறி ரணில் இந்த வேலையை செய்தார்.. எமக்கு பௌத்தத்தை தந்த இந்தியாவுடன் நான் உறவை பேணுவேன்.. அவர்களுடன் சிறந்த உறவு தொடரும்…

* என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டேன்.. எனது பயணத்தை தொடர்வேன்…

-(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |