Home » » செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் ஒக்ஸிஜன்! - கண்டுபிடித்தது நாசா

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் ஒக்ஸிஜன்! - கண்டுபிடித்தது நாசா

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது நாசா கடந்த 2012 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது.
இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் ஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா
செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது
நாசா கடந்த 2012 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிவதே கியூரியாசிட்டி ரோவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் முக்கியமாக கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகம் குறித்த முக்கியமான உண்மையை கண்டறிந்து உள்ளது.
கியூரியாசிட்டி மாங்கனீசு ஒக்ஸைட் கண்டுபிடிப்புடன் தொடங்கியது. இது அதிகமான ஒக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இரசாயன கலவைகள் ஆகும்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே உள்ள உப்பு நீர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான நுண்ணுயிரியல் வாழ்க்கைக்கு உதவுவதற்கு போதுமான ஒக்ஸிஜன் மூலக்கூறுகள் இருப்பதாக என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இன்றும் கடந்த காலத்திலும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை பற்றிய நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு முழுமையாகப் புரட்டி போட்டுள்ளது. இப்போது வரை நுண்ணுயிரி உயிரை காப்பாற்றுவதற்கு செவ்வாய் கிரகத்தில் ஒக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த கண்டுபிடிப்பு
ஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா
செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது நாசா கடந்த 2012 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிவதே கியூரியாசிட்டி ரோவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் முக்கியமாக கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகம் குறித்த முக்கியமான உண்மையை கண்டறிந்து உள்ளது.
கியூரியாசிட்டி மாங்கனீசு ஒக்ஸைட் கண்டுபிடிப்புடன் தொடங்கியது. இது அதிகமான ஒக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இரசாயன கலவைகள் ஆகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே உள்ள உப்பு நீர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான நுண்ணுயிரியல் வாழ்க்கைக்கு உதவுவதற்கு போதுமான ஒக்ஸிஜன் மூலக்கூறுகள் இருப்பதாக என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இன்றும் கடந்த காலத்திலும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை பற்றிய நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு முழுமையாகப் புரட்டி போட்டுள்ளது. இப்போது வரை நுண்ணுயிரி உயிரை காப்பாற்றுவதற்கு செவ்வாய் கிரகத்தில் ஒக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
Share this article :

0 comments:

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |