Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தினால் அவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் குழாமினால் இது தொடர்பாக தீர்ப்பளிக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட 4 பேரின் கொலை சம்பவம் தொடர்பாக 2016ஆம் ஆண்டில் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட போது துமிந்த சில்வா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தனர். -(3)

Post a Comment

0 Comments