Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் பதற்றம்! ஆட்கடத்தலுடன் கூடிய மதமாற்றம்

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக மதமாற்றம் என்பது தீவிரமடைந்து வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக கடந்த வாரம் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டை எரித்து அச்சுறுத்திய சம்பவம் ஒன்று அரங்கேறியிருந்தது. இதன் அடுத்த கட்டமாக நேற்றைய தினம்,
அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் சிறுவனை பெற்றோரது விருபத்திற்கு மாறாக இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முயற்சித்த கும்பலை தடுத்து நிறுத்தினர் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள்.
மருதமுனையில் முஸ்லிம் நபர் ஒருவரின் கடையில் தங்கி வேலை பார்த்து வந்த மனவளம் குன்றிய 16 வயது சிறுவனை இஸ்லாத்திற்கு மாற்றுவதற்காக எடுத்த முயற்சியே பெற்றோரின் கண்ணீர்ப் போராட்டத்தால் தடுக்கப்பட்டது. அதன் பின்னர் பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டு, சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் வீட்டில் வறுமை காரணமாகவே தொழிலுக்குச் சென்றுள்ளான்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அண்மைக் காலங்களாக சிறுவன் வீட்டிற்கு வருவதனைக் குறைத்துள்ளான் இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்த போது திடீரெனை சாமியறையில் இருந்த தெய்வங்களின் படங்களை காலால் மிதித்து இவை எமக்கு காசு தருமா என கேட்டுள்ளான்.
அதன் பின்பு மத்தியமுகாம் பள்ளி வாசலுக்குள் சிறுவன் சென்றுள்ளான். அவனைப் பின்தொடர்ந்த பெற்றோரை பள்ளிவாசல் நிருவாகத்தினர் தடுத்து நிறுத்திய பின்னர் சிறுவனை காரினுள் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மனித உரிமைகள் மற்றும் சிறுவர் நன்நடத்தைப் பிரிவில் முறைப்பாடு செய்த பின்னர் மத்தியமுகாம் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.
சிறுவனின் பெற்றோர் மற்றும் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்களின் முயற்சியால் சிறுவனை மதமாற்றம் செய்ய எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments