Home » » சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி கைது

சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி கைது


சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி ஒருவரை இத்தாலிய போலீசார் கைது செய்துள்ளனர்.
டுபாயில் இருந்து தனது மனைவி மற்றும் இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடன் இத்தாலி விமான நிலையத்தில் இறங்கிய இந்த 50 வயது நபர், தனது ராஜதந்திர கடவுசீட்டை முதலில் காண்பித்த பின்னர் தனது மனைவியின் மனைவியின் கடவுசீட்டை காண்பித்துள்ளார். பின்னர் ஏனைய இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கடவு சீட்டுக்களை காட்டி யுவதிகள் இருவரும் தனது மகள்கள் என்றும் இரண்டு இளைஞர்கள் தனது பெறா மகன்கள் என்றும் கூறி அவர்கள் இத்தாலி சென்று பின்னர் பிரான்சுக்கு சுற்றுலா செல்லவிருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் அந்த 4 பேருக்குமான ராஜதந்திர கடவு சீட்டுக்களையும் கொடுத்துள்ளார்.
இவர்களின் ராஜதந்திர கடவுசீட்டுகளை பார்த்து சந்தேகம் அடைந்த குடிவரவு அதிகாரி தீவிர விசாரணை நடத்தியுள்ளார். இதன்போது, இந்த நால்வரினதும் கடவுசீட்டுக்கள் போலியானவை என்றும் நவீன அச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செங்கண் விசா பெறப்பட்டிருந்தது. அதேவேளை, இந்த நால்வரினதும் கொழும்பு விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட சாதாரண கடவுசீட்டுக்கள் இவரது கைப்பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
விசாரணைகளின் பின்னர் ஒவொருவரிடமும் தலா 4000 யூரோக்கள் வாங்கி அவர்களை சட்ட விரோதமாக இத்தாலிக்குள் அவர் கூட்டிவந்தமை தெரியவந்தது. உடனடியாக இந்த ராஜதந்திரி கைதுசெய்யப்பட்டதுடன் அவரது மனைவியும் ஏனைய நாலாவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |