Home » » இவ்வார அமைச்சரவை தீர்மானங்கள் : (முழுமையாக)

இவ்வார அமைச்சரவை தீர்மானங்கள் : (முழுமையாக)


2018.09.18 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01.உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 05 ஆவது விடயம்)
உள்ளூரில் உற்பத்தி செய்யக் கூடிய அனைத்து உணவு உற்பத்திப் பொருட்களையும் தரத்துடன் இந்த நாட்டிலேயே உற்தபத்தி செய்வதன் மூலம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவாகும் வெளிநாட்டு நாணயத்தை குறைக்கும் நோக்குடன் உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது, இருப்பினும் கடந்த காலத்தில் நிலவிய சீரற்ற கால நிலையின் காரணமாக இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பாரத்திருந்த இலக்கை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதிலும்; உள்ள நீர்ப்பாசன கட்டமைப்பை மறுசீரமைத்தல் மற்றும் நவீன தொழில் நுட்ப முறையை விவசாயிகள் மத்தியில் பிரபல்யம் படுத்துவதற்கும் விவசாயம், கடற்றொழில் மற்றும் கால்நடைத் துறைகளில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினரை ஊக்குவிப்பதற்கும் இந்த துறைகளுக்காக புத்தாக்க எரிசக்தியின் பாவனையை விரிவுபடுத்துவதற்கும் தேசிய பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் உணவு உற்பத்தித் துறைக்கான ஆய்வுகளும் மேம்படுத்தப்படவுள்ளன. இந்தப் பணிகளை உள்ளடக்கிய வேலைத் திட்டம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு வரையில் நீடிப்பதற்கு தேவையான நிதி உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. கால நிலை மாற்றத்தினால் பாதகமான தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தேவையான சர்வதேச விஞ்ஞான அடிப்பைடையினலான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 07 ஆவது விடயம்)
பாதகமான கால நிலை அழுத்தத்தைகட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டு ஒன்றிணைந்த நடைமுறையை முன்னெடுத்தல் மற்றும் சர்வதேச சுற்றாடல் தொடர்பான உடன்படிக்கையை தேசிய ரீதியில் நிறைவேற்றுவதற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக பசுமை கால நிலை நிதியம் மற்றும் விவசாயத்துக்கான உற்பத்தி ஆய்வு தொடர்பிலான சர்வதேச பேரவையுடனான பராமரிப்பு அரச உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை தெரிவிப்பதற்கும் அந்த நிறுவனத்தின் உடன்படிக்கையை கைச்சாத்திட்டு ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இலங்கையில் முதியோர் பராமரிப்பு இல்ல சேவைக்கான வசதிகளை வலுப்படுத்துதல் (நிகழ்;ச்சி நிரலில் 09 ஆவது விடயம்)
2041 ஆம் ஆண்டளவில் இலங்கையில் முதியோர் எண்ணிக்கை தற்பொழுது உள்ள அளவிலும் பார்க்க இரண்டு மடங்காகும். அதாவது மொத்த சனத்தொகையில் 24.8 சதவீதமாக அமைந்திருக்குமென்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்குமாயின் முதியோரின் சமூக பாதுகாப்புக்காக முறையான நடைமுறைக்காக தற்பொழுது உள்ள அகு முறை வறையறுக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக குடும்பத்துடன் இருக்கும் முதியோருக்காக பராமரிப்பு இல்லம், குடும்ப அங்கத்தவர்களுடனான வயதானவர்களுக்கு நிரந்தர வீடு மற்றும் கடும் ஊனமுற்ற அல்லது ஒரு இடத்தில் தனிமைப்பட்ட முதியோர்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் -கீழ் வாட்டை அமைப்பதற்கான நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் முதியோர் பராமரிப்பு சேவைக்காக அதிகரித்துவரும் கேள்விகளுக்கு ஏற்ற வகையில் முதியோர் பராமரிப்பு சேவையை வழங்கும் சுமார் 10 ஆயிரம் பேரை பயிற்றுவிப்பதற்கும் தேவையான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதற்கு தேவையான வசதிகளை செய்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் சமூக சேமநல மற்றும் ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சர் தயா கமகே அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கைக்கும் லக்சம் பேர்க்கும் இடையில் இரு தரப்பு விமான சேவைக்கான பேச்சுவார்த்தை (நிகழ்ச்சி நிரலில் 13 ஆவது விடயம்)
பயணிகள் மற்றும் விமானப் பொருட்களை எடுத்துச் செல்லுதல் தொடர்பில் இலங்கைக்கும் லக்சம்பேர்க்குமிடையில் விமான சேவை உடன்படிக்கையை எட்டுவதற்காக சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக இருதரப்புக்கும் இடையில் உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது. இதற்காக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. நிதி சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் – 2018 (நிகழ்ச்சி நிரலில் 14 ஆவது விடயம்)

அரசாங்கத்தினால் 2016. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வசதிகளை செய்வதற்கான நிதி சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு இந்தப் பிரேரணைகளை பயன் உள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதினால் அந்தத் திருத்தங்களை நிதி சட்டத்திருத்தத்தில் பாராளுமன்ற குழூவின் சந்தர்ப்பத்தின் போது உள்வாங்கப்படுவது பொருத்தமானதென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக பல்வேறு வரி திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வரி அறவிடும் முறையை நடைமுறைப்படுத்துவதற்கான நாள் மற்றும் ஏனைய நிருவாக ஒழுங்குவிதிகளின் திருத்தங்களை மேற்கொண்டு நிதி சட்டத்தில்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக நிதி சட்ட தயாரிப்புக்காக ஆலோசனை வழங்குவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. மடு நீர் விநியோகத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 19 ஆவது விடயம்)
400 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட மடு புனித தேவாலயம் கத்தோலிக்க – பக்தர்களைப் போன்று ஏனைய மதத்தினரதும் கௌரவத்துக்கு பாத்திரமான புனித பூமியாகும். இந்த புனித பூதமிக்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கு நீரை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் நீர் விநியோக கட்டமைப்புக்காக செயல்படும் நீர் சுத்திகரிப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்காக 554 மில்லியன் ரூபா செலவில் மடு நீரைப் பயன்படுத்திநாள்ளொன்றுக்கு 1000 கன மீட்டர் நீரை விநியோகிக்க கூடிய வகையில் மடு நீர் விநியோகத் திடடம் நடைமுபை;படுத்தப்படவுள்ளது. இதற்காக நகர திட்டமிடல் நீர்விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்ரகை மற்றும் லாவேசுக்கும் இடையில் இருதரப்பு ஆலோசனை பொறிமுறை ஒன்றை அமைப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்;ச்சி நிரலில் 20 ஆவது விடயம்)
இலங்கைக்கும் லாவோசுக்கும் இடையில் தற்போது உள்ள இரு தரப்பு தொடர்புகளை மேம்படுத்துவதைப் போன்று பிராந்தியம் மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பில் அந்யோன்ய ரீதியில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்வதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. இதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள காணியைப் பயன்படுத்தி சிறிய தொழில் முயற்சியாளர்களுக்காக கைத்தொழில் பேட்டை யொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 24 ஆவது விடயம்)
தற்பொழுது தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படாத காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் 330 ஏக்கர் காணியில் சுற்றாடலுக்கு பொருத்தமான முறையில் கைத்தொழில் பேட்டையொன்றை அதில் அமைக்கும் முதலாவது கட்டப் பணியின் கீழ் 2019 ஆம் ஆண்டுக்குள் 100 ஏக்கர் காணியை அபிவிருத்திச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்மந்தப்பட்ட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்குமாக தகுதியான முதலீட்டாளர்களை தெரிவுசெய்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்த அலுவல்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 25 ஆவது விடயம்)
இதுவரையில் எந்த வித தயாரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத எம்பிலிப்பிட்டி கடதாசி கைத்தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை நவீனமயப்படுத்திய பின்னர் தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக கொரியன் ஸ்பா என்ற நிறுவனத்தினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 1200 மில்லின் ரூபா முதலீட்டுடன் பொதியிடும் பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடதாசி வகைகளை தயாரிப்பற்காக இந்தத் தொழிற்சாலை கொரியன் ஸ்பா என்ற நிறுவனத்துக்கு குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைத்தல் (நிகழ்;ச்சி நிரலில் 27 ஆவது விடயம்)
புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கிராம மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்காக 346 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி மிலேனிய பிரதேசத்தில் ஹோரஹேன நியுசெட்டல்வத்த என்ற காணியில் 24 ஏக்கரில் அரைப்பகுதியை பயன்படுத்தி ரைகம கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தத அமைச்சர் ரிசாத் பதியுதின் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. காலி ரயில் பாலத்தை மறுசீரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 31 ஆவது விடயம்)
காலி, மாத்தறை ரயில் பாதையில் மோட என்ற கால்வாய் ஊடாக அமைக்கப்பட்டுள்ள பாலம் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு தடையாக அமைந்திருப்பதனால் இந்தப் பாலத்தை அகற்றி புதிய பாலம் ஒன்றை அமைப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. உத்தேச பாலத்தை நிர்மாணிக்கும் வகையில் போக்குவரத்துக்காக தற்காலிக ரயில் பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. கட்டிடங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அவற்றின் நிலையை அறிக்கையிடும் முறையொன்றை ஏற்படுத்துதல் (நிகழ்;ச்சி நிரலில் 34 ஆவது விடயம்)
கட்டிட கட்டமைப்பு தொடர்பான நிலைமை காலத்துடன் கட்டிடத்தின் கட்டமைப்பு பிரிவுகளுக்கு பாதிப்பு ஏற்படுதல் மற்றும் சீர்குலைதல், புதுப்பித்தல் மற்றும் புதிய பகுதிகளை ஒன்றிணைப்பது போன்ற பணிகள் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு பொருத்தமான தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் கட்டிடங்களை பயன்படுத்துவோரினதும் அயலில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் கட்டிட மதிப்பிடுதல் மற்றும் தன்மையை அறிக்கையிடும் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை ஊக்குவிப்பதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீர்ப்பாசன மற்றும் நீர்வள மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கடற்றொழில் துறைமுகம் நங்கூரம் இடும் பகுதி மற்றும் இறங்குதுறையை நிர்மாணித்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 37 ஆவது விடயம்)
கடற்றொழில் துறைமுகம் நங்கூரம் இடும் பகுதி மற்றும் இறங்குதுறையை நிர்மாணித்தல் மற்றும் அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 7 மீன் பிடி துறைமுகங்களும் 03 வள்ளங்களுக்கான கூடாரம்,02 இறங்குதுறைகளும், 3 நங்கூரம் இடும் பகுதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் மேற்கொள்ளப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள பலப்பிட்டிய சுதுவெல்ல, தொடந்துவ, அம்பாந்தோட்டை, மயிலிட்டி, ஆகிய மீன்பிடிதுறைமுகங்களும் மேம்படுத்தப்படுவதுடன் மற்றும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. நீர்கொழும்பு, களப்பு அபிவிருத்தி திட்டம் வெலிபடன்வில, தெகிவளை,ரெக்கவ, மற்றும் மாவெல்ல நங்கூரம் இடும் பகுதியை அமைத்தல் உள்ளிட்ட திட்டத்தை 2018 தொடக்கம் 2020 வரையிலான காலப் பகுதியில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் நீரியியல்வள மற்றும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் விஜித் விஜியமுனி சொய்சா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இலங்கை ஊக்க மருந்து கட்டுப்பாட்டு ஆய்வு பிரிவுக்கான உபகரணங்களைவிநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 44 ஆவது விடயம்)
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் இலங்கை வீரர் வீராங்கனைகள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நிலையை குறித்து விளையாட்டின் உயிர்த்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை ஊக்கமருந்து கட்டுப்படுத்தும் நிறுவனத்தின் ஆய்வு பிரிவுக்கு ஆய்வுக்குத் தேவையான உபகரணங்களை விநியோகிப்பதற்காக மாகாண சபை உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரித்தப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 45 ஆவது விடயம்)
மோதல் நிலவிய பிரதேசங்களில் கண்ணி வெடிகளை அகற்றும் தேசிய வேலைத்திட்டம் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் இதுவரையில் 137 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்களில் மேலும் 28 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன்மூலம் கண்ணிவெடிகளை அகற்றும்பணிகளை 2020 ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக மீள் குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. 10 000 கருவா கைவினைஞர்களுக்கு தேசிய தொழில் தகுதி 3 (என்விகியு 3) சான்றிதழை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 51 ஆவது விடயம்)

கருவா தொடர்பான பணிகளை சரியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 10 000 கருவா கைவினைஞர்களுக்கு தேசிய தொழில் தகுதி 3 மட்டம் (என்விகியூ 3) என்ற சான்றிதழை வழங்குவதற்காக வேலைத் திட்டம் ஒன்றை வகுத்தல் மற்றும் இதற்குத் தேவையான வசதிகளை செய்வதற்காக சமூக சேமநல மற்றும் ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சர் தயா கமகே அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. கைத்தொழிற்சாலைகள் நிலைமை தொடர்பாக கைத்தொழிற்சாலை கட்டிட சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிழ்ச்சி நிரலில் 59 ஆவது விடயம்)

ஊழியர்களின் தொழில்பாதுகாப்பு சுகாதாரம், மற்றும் சேம நலன்களை முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் தொழில் திணைக்களத்தினால் தொழிற்சாலைகளை பரிசோதனைகளை செய்வதற்காக தொழிற்சாலை கட்டளைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் நிலைமை தொடர்பில் மிகவும் பயனுள்ள வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் தேவையை கவனத்தில் கொண்டு தொழிற்சாலைகளை பதிவு செய்தல், தொழிற்சாலை கட்டிடங்களை அங்கீகரித்தல் , தொழிற்சாலைகளின் நீராவி பொயிலர்களை பதிவு செய்தல், நீராவி பொயிலர் மற்றும் ஏனைய பாத்திரங்களை பரிசோதித்தல் தொடர்பாக சான்றிதழ்களை வழங்குதல், தொழிற்சாலைகளில் ஊழியர்களை அதிக ஒலியிலிருந்து பாதுகாத்தல், மற்றும் தொழிற்சாலைகளை பிரகாசமடையச் செய்தல் பொது உடனபாட்டை ஏற்படுத்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தொழிற்சாலை கட்டளை ஒழுங்கு விதிகளின் கீழ் ஐந்து கட்டளைகளுக்கு பாhராளுமன்றத்தில் அனுமதி பெறுவதற்காக சமர்ப்பிப்பதற்கும் இந்த அனுமதியின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டளையை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்பு அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் (கா.ஆ.அ) சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 60 ஆவது விடயம்)

காணாமல் போனோர் அலுவலகத்தினால் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் மூலம் பாதிப்பை ஈடுசெய்யக்கூடிய சட்டரீதியிலான பொறுப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்பு மேற்கொள்வது தொடர்பில் தனது சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளது. இதே போன்று பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிதி உதவி வேலைத் திட்டம் கடன் நிவாரண வேலைத் திட்டம், வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டம், கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டம், தொழிற்பயிற்சி, வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், தொடர்பான சிபார்சுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சிபார்சுகளை மதிப்பீடு செய்து பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைப்பதற்காக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் கீழ் மேலும் 10 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணை குழு ஒன்றை நியமிப்பதற்கும் உப குழுவின் ஆலோசகைளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்வதற்காகவும் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. அரசாங்க நிறுவனத்துடன் உள்ள மின் உற்பத்தி இயந்திரங்களில் மேலதிக உற்பத்தியை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 62 அவது விடயம்)

அரச துறை நிறுவனங்களினால் அவசர சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மின்உற்பத்தி இயந்திரங்கள் மூலம் சுமார் 200 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அவசர சந்தர்ப்பங்களில் டீசல் மின் உற்பத்தியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதைப் பார்க்கிலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தி இயந்திரங்களில் பிரதான வலைப் பின்னலுக்கு மின்சாரத்தை விநியோகிக்க முடியுமாயின் இது பயனுள்ள மாற்று வழியாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச துறைக்கு உற்பட்ட நிறுவனங்கள் கொண்டுள்ள மின் உற்பத்தி இயந்திரங்கள் மூலம் பெற்றப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கை மின்சார சபைக்கு அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிக் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார கேட் (e-Gates system)கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 65 ஆவது விடயம்)

தற்பொழுது குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் விமான நிலையத்தில் வழங்கப்படும் சேவைக்கு மாற்றாக மின்சார கேட் (e-Gates system) கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வருகை மற்றும் வெளியேறும் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. இதற்கமைவாக 260 மில்லியன் ரூபா முதலீட்டுடன் 10 மின்சார கேட் (e-Gates system) கட்டமைப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களும்; உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ். பி. நாவின்ன அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. இங்குராக்கொட தேசிய தொழில் பயிற்சி நிலையத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 67 ஆவது விடயம்)

கிராம இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு உதவக்கூடிய ஆற்றலை பெற்றுக்கொடுப்பதற்காக தேசியமட்டத்திலான தொழிற்பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை இங்குராக்கொடையில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை 35 மில்லியன் ஈரோக்களுக்கு நெதர்லாந்தின் (M/S Gemco International BV) நிறுவனத்திற்கு வழங்குவதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆய்வு, திறனாற்றல் அபிவிருத்தி, மற்றும் தொழில்பயிற்சி மற்றும் மலையக உரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகம் மற்றும் இயற்கை கழிவறை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதி அபிவிருத்தி (நிகழ்ச்சி நிரலில் 70 ஆவது விடயம்)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகம் மற்றும் இயற்கை கழிவறை வசதி திட்டத்தின் கீழ் நல்லூர், கட்டுடை, வட்டுக்கோட்டை, புங்குடுதீவு. காரைநகர். நாவற்குழி. புத்தூர். பூநகரி. மீசாலை. கொடிகாமம். பளை, கரவெட்டி, பூநரி. பொக்கனி, நாவற்குழி, கட்டுடை, மற்றும் வேலணை ஆகிய பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான கட்டமைப்பை அமைத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைய ஆளு ளுநைசசய ஊழளெவசரஉவழைn (Pஏவு) டுவன என்ற நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துககுக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. கொழும்பு 2 யூனியன் பிளேஸ் முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றை வரையறுக்கப்பட்ட எக்ஸஸ் ரியல்டீஸ் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 73 ஆவது விடயம்)

அபிவிருத்தி திட்டத்துக்காக பயன்படுத்துவதற்கென கொழும்பு 2 யூனியன் பிளேஸ் முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட 114.56 பேர்ச்சஸ் காணியை சம்பந்தப்பட்ட கொள்வனவு தொடர்பில் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் சிபாரிசுக்கு அமைய 1017.20 மில்லின் ரூபாவுக்கு வரையறுக்கப்பட்ட எக்ஸஸ் ரியல்டீஸ் (தனியார்) என்ற நிறுவனத்துக்கு 99 வருட கால குத்தகைக்கு வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,
24. இடர் அனர்ததத்துடனான பிரதேசங்களில் குடியிருக்கும் மக்களுக்கு Proquest வீடுகளை நிர்மாணித்தல் (நிகழ்;ச்சி நிரலில் 75 ஆவது விடயம்)

மண் சரிவு ஏற்படக் கூடிய கூடுதலான அனர்த்தத்துடனான பிரதேசங்களில் வாழும் குடும்பங்களை மீள குடியமர்த்துவதற்காக Proquest 10 ஆயிரம் வீடகளை நிர்மாணிப்பதற்காக சீன ரெயில்வே பீஜிங் பொறியியலாளர்களின் குரூப் கம்பனி வறையறுக்கப்பட்ட யப்கா நிர்மாணிக்கும் தனியார் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தகளை மேற்கொள்வதற்கும் இதன் முதல் கட்டத்தின் கீழ் 2530.5 மில்லியன் ரூபா முதலீட்டுடன் இரத்தினபுரி மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் 1170 வீடுகள் நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நீர்ப்பாசன நீரியல்வள இடர்முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. கொகுவல, கெட்டம்பே மற்றும் ஹீறுஸ்சகல மேம்பாலங்களை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 77 ஆவது விடயம்)

அங்கேரிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 58.68 மில்லியன் யூரோக்கள் முதலீட்டுடன் கொகுவல, கெட்டம்பே மற்றும் ஹீறுஸ்சகல ஆகிய இடங்களில் 3 மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக அங்கேரிய அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள டீநவழரெவநிவைழ Pடஉ என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை வழங்கி; நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. தெற்கு வீதியுடன் தொடர்புடனான திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 78 ஆவது விடயம்)

தெற்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள திட்டத்தை பூர்த்தி செய்த பின்னர் மேலும் நிர்மாணிப்பதற்காக எதிர்பார்க்கப்படும் கிடைக்கப்பெறும் நிதியத்தைப் பயன்படுத்தி கொழும்பு, இரத்தினபுரி வீதியில் ஹோமாகமையிலிருந்து பனாகொடை வரையிலான 1.9 கிலோ மீற்றர் தூர வீதிப் பிரிவும் கொழும்பு இரத்தினபுரி வீதியில் பனாகொடையிலிருந்து கொடகமை சந்தி வரையிலான 2.16 கிலோ மீற்றர் தூரப் பகுதியும், பாமன்கடை ஹொரணை வீதியில் டபிள்யு ஏ டி சில்வா மாவத்தையிலிருந்து பாமன்கடை வரையிலான 0.5 கிலோ மீற்றர் வீதியும் பாமன்கடை ஹொரணை வீதியில் பிலியந்தலை நகரில் 2.95 வீதியுமாக நான்கு வீதிப் பிரிவுகளை புனரமைத்தல் மேம்படுத்துவதற்காக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. மதவாச்சி. ஹொரவப்பொத்தானை வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 79 ஆவது விடயம்)

வடக்கு வீதியுடன் இணைந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த திட்ட செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மேலும் எஞ்சியுள்ள நிதியைப் பயன்படுத்தி மதவாச்சி ஹொரவப்பொத்தானை வீதியில் 10 கிலோ மீற்றர் தொடக்கம் 37.8 கிலோ மீற்றர் வரையிலான வீதியில் 27.8 கிலோ மீற்றர் வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. இலங்கை பொலிஸாருக்கு சீருடைக்கான துணியைக் கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 82 ஆவது விடயம்)

இலங்கை பொலிஸ் சேவையில் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரின் உத்தியோகபூர்வ சீருடைக்குத் தேவையான சீருடை துணி; மீற்றர் ஒன்றை 346 ரூபா வீதம் 4 இலட்சம் மீற்றர் துணியை வென்காட் இன்டஸ்டீஸ் பிரேவேட் லிமிட்டெட்டிடமும் ஒரு இலட்சம் மீட்டர் துணியை கிரேட் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் பிரேவேட் லிமிட்டெட்டிமும் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்காக அரச நிறுவாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 85 ஆவது விடயம்)

தெளிவுபடுத்துவதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழலை தவிர்த்தல் தடுத்தல் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எண்ணக்கருவுக்கு அமைவான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை அரச பங்களிப்பின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் மூலம் நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை மேற்கொள்வதற்கான செயலமர்வும் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த வேலைத் திட்டத்தை 2019 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்கும் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. திரிபிடகயை தேசிய உரிமை ரீதியில் பிரகடனப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 86 வது விடயம்)

சம்புத்த போதனைகள் அனைத்தையும் உள்ளடக்கிய திரிபிடகை தொடர்பில் மீள் பதிவு மற்றும் ஏனைய பணிகளை புத்தசாசன அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்வதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்களும் மற்றும் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களும் ஒன்றிணைந்து கூட்டாக முன்வைத்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
31. 2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலம் (நிகழ்ச்சி நிரலில் 87 ஆவது விடயம்)

2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்காக ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலம் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2019 – 2021 இடைக்கால வரவு செலவு திட்ட கட்டமைப்பின் கீழ் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டும் தற்போது உள்ள வளங்களை கவனத்தில் கொண்டும் இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

32. 500 மெகா வோட் (MW) இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மானித்தல் (நிகழ்ச்சி நிரலில் 91 ஆவது விடயம்)
இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய அரசாங்கத்துக்கு உட்பட்ட நிறுவனமான NTPC  நிறுவனத்தின் மூலம் கூட்டாக கெரவலப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள 500 மெவோட் இயற்கை எரிவாயு அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான கூட்டுத்திட்டம் மற்றும் பங்குத்தாரர்களின் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

33. அமெரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்ரேசன் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 92 ஆவது விடயம்)

மிலேனியம் செலேஞ்ச் நிதியுதவி வேலைத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் மத்தியில் போக்குவரத்து மற்றும் காணி போன்ற துறைகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மிலேனியம் செலேஞ்ச் எக்கவுன்ட் (கரன்டி) இலங்கை லிமிட்டெட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கும் அதற்குத் தேவையான ஏனைய வசதிகளை செய்வதற்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |