Advertisement

Responsive Advertisement

சந்திரிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயர் விருது!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருதான “Commandeur de la Legion D’Honneur” வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை பெற்றுள்ள முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றுள்ளார்.
இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கையளித்தார்.
   

Post a Comment

0 Comments