நுண்கடன் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதுதொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று (30.08)மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜாசரவணபவன்தலைமையில் இடம்பெற்றது.மாநகரசபையின் “நுண்கடன்” தொடர்பான குழுவின்ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர சபைஉறுப்பினர்களான இரா.அசோக்,ஜேம்ஸ்திலிப்குமார், அ.கிருரஜன், தயாளகுமாரன்கௌரி, சுலக்ஷனா திவாகரன் ஆகியோரும். மாநகரஎல்லைக்குள் செயற்படும் நிதி நிறுவனங்களின்பிரதிநிதிகளும் கலந்து கொண்டுதம் சார்ந்தகருத்துகளை தெரிவித்தனர். சமகாலத்தில்குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நுண்கடன்பிரச்சனைகளால் இடம்பெறும் தற்கொலைகள்மற்றும் கலாசார சீரழிவுகளைமட்டுப்படுத்தும்நோக்கிலும் நுண்கடன்களை வளங்கும்நிறுவனங்களின் ஊழியர்களுக்கும்பொதுமக்களுக்கும் இடையே உள்ளமுறன்பாடுகனை தீர்க்கும் நோக்கிலும்இக்கூட்டத்தின் கலந்துரையாடல்கள்அமைந்திருந்தன.
மாநகர சபையின் எல்லைக்குள் இயங்கும் நுண்கடன்நிறுவனங்கள் என்னென்ன காரணங்களுக்காககடன் வழங்குகின்றன? கடன் வழங்க கோரப்படும்ஆவணங்கள் எவை?அந்தக் கடன்களுக்கான வட்டிவீதம் என்ன? மீழப்பெற்றுக்கொள்ள நிறுவனம்பின்பற்றும் வழிமுறைகள் என்ன? எனப் பல்வேறுவிடயங்கள் தொடர்பாகஇக்கூட்டத்தில்ஆராயப்பட்டதுடன், பொதுமக்களால்,நுண்கடன் நிதிநிறுவனங்கள் தொடர்பில்மாநகரசபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளும் இக்கூட்டத்தில் படித்துக்காட்டப்பட்டன.
இக்கலந்துரையாடலின் ஊடாக மாநகர முதல்வர்,தனது எல்லைக்குள் செயற்படும் நிதி நிறுவனங்கள்அனைத்தும் மத்திய வங்கியின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.அதேவேளைமாநகரசபையின் வியாபார அனுமதியையும்கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதநிறுவனங்கள் தாமாகவே வெளியேறிச் செல்லவேண்டும். கடன்வளங்குவதற்கு முன்னர்வாடிக்கையாளர்களின் தொழில், வருமானம்,தங்கிவாழ்வோர் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவேண்டும். எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி, நிதி நிறுவனங்களுக்காக களத்தில்செயற்படும் ஊழியர்கள் அதெற்கெனபயிற்றப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அவர்கள்வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குசென்று அறவீடுசெய்ய முடியாது. விண்ணப்பப் படிவங்கள் தமிழில்இருக்க வேண்டும். அது பொருள் விளங்கும்வகையில் வாடிக்கையாளர்களுக்கு படித்தும்காட்டப்பட வேண்டும்.ஒரே வட்டி வீதத்தின் கீழ்இயங்க அனைத்து நுண்கடன் நிறுவனங்களும்முன்வர வேண்டும், நுண்கடன் தொடர்பானஅடுத்தடுத்த கூட்டங்களுக்கு நுண்கடன் நிதிநிறுவனங்களின்உயர்நிலை அதிகாரிகள்சமுகமளிக்க வேண்டும். என்று பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களுக்கு ஏற்பசெயற்படத் தவறும் நிறுவனங்களின்வியாபாரஅனுமதி மாநகரசபையால் இரத்துச்செய்யப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
0 comments: