"இளையவர்கள் சமூக பொறுப்பாளராகும் " கருப்பொருளில் இளைஞர்களுக்கு சமூகம் தொடர்பாக ஒழுங்கமைப்புவலிமை, படைப்பாற்றலை வளர்ச்சி செய்யும் முகமாக கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர்விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரனையில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செல்வன் கணேசமூர்த்தி சசீந்திரன் ஒழுங்கமைப்பு மற்றும் ஏற்பாட்டில் இளைஞர் பயிற்சி முகாம் கடந்த 03,04,05 ( வெள்ளி, சனி, ஞாயிறு) அகிய தினங்களில் குறிஞ்சாமுனை அ.த க பாடசாலையில் மூன்று நாள் வதிவிடமாக நடைபெற்றது.
இந்த மூன்று நாள் வதிவிட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த 85 இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 05.08.2018 ஞாயிற்றுக்கிழமை ம.மே/குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றுள்ளது.
சான்றிதழ் வழங்கும் இறுதி நிகழ்வில் கெளரவ ஞா.சிறிநேசன் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மேற்கு வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.சுரனுதன், வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜெகன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவரும், தேசிய சம்மேளன உறுப்பினருமான ரி.விமலராஷ் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் தமது ஆற்றல் மற்றும் திறமைகளை அன்னியொன்னியமாக அறிந்து கொள்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இளைஞர்களின் தலைமைத்துவம், ஆளுமை வளர்ச்சிக்கும் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்வதற்க்காக இடர் முகாமைத்துவம், இசையும் இரசனையும், நிபுணத்துவ அனுபவ பகிர்வு, முரண்பாடு தீர்த்தல்( மோதல் முகாமைத்துவம்) , மென் திறன் விருத்தி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக இந்த பயிற்சி முகாமில் வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments