Home » » பொத்துவில் மக்களின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு - ஜனாதிபதி தெரிவிப்பு!

பொத்துவில் மக்களின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு - ஜனாதிபதி தெரிவிப்பு!



பொத்துவில், ஊறணி மக்களின் காணிப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்.
பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட P 25 ஊறணி கனகர் கிராமத்து மக்கள் தமது பூர்வீக இடத்தில் தம்மை மீளக் குடியமர்த்துமாறு வலியுறுத்தி கடந்த 14 ஆம் திகதி நில மீட்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1990 ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் கடந்த 2006 ஆம் ஆண்டு வன விலங்குகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் தமது சொந்த இடமான ஊறணி கனகர் கிராமத்திற்கு திரும்பியபோது அங்கு குடியேறுவதற்கு வனவிலங்கள் திணைக்களம் தடை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தமது சொந்த இடங்களை மீட்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்து, கனகர் கிராம மத்தியில் தற்காலிக கூடாரங்களை அமைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கடந்த 16 ஆம் திகதி நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடி தீர்வு பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தார்.
எனினும் தமக்கான நீதி எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்கப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தயார் என காணி உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நாடாளுமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரனும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த மக்களின் காணிகளை விடவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தாக கவீந்திரன் கோடீஸ்வரன் கூறியுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி மகிழ்ச்சியளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |