பாண்டிருப்பு தினகரன் நிருபர்
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக வல்லிபுரம் சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் சேவை தரம் 1ஐ சேர்ந்த இவர் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டள்ளார்.
1990 ஆம் ஆண்டு விஞ்ஞான ஆசிரியராக ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர் தனது முதல் நியமனத்தில் கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் சேவையில் இணைந்து கொண்டார். அதன்பின்பு அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயம், கடுக்காமுனை வாணி வித்தியாலயம் அகியவற்றில் சேவையாற்றிவிட்டு 40 வட்டை விபுலானந்தா வித்தியாலயத்தின் அதிபராகவும் ஓந்தாச்சிமடம் மகாவித்தியாலயம் களுதாவளை விக்கினேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றிலும் அதிபராக சேவையாற்றியுள்ளார்.
கலைப்பட்டதாரியான இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா சிறப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளார். ஆரம்பக்கலிவியை அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்திலும், உயர்கல்வியை சிவானந்தா வித்தியாலயத்திலும் பயின்றுள்ளார்.
தற்போது கடந்த மாதம் முதல் செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தின் அதிபராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments