Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான விசேட ஆணைக்குழு இன்று கூடுகிறது


அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு முதற் தடவையாக இன்று கூடவுள்ளது.

கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இதன்படி அந்த ஆணைக்குழு இன்றைய தினம் முதற்தடவையாக கூடவுள்ளது. சுகாதாரம் , உயர்கல்வி , தபால் மற்றும் ரயில்வே ஆகிய துறைகளின் சம்பள விடயங்கள் தொடர்பாக இந்த குழு ஆராயவுள்ளது. -(3)

Post a Comment

0 Comments