Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வவுனியாவில் இரண்டு பாடசாலை சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது


வவுனியாவில் கடத்தப்பட்ட இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரப்பகுதி ஒன்றைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது மாணவிகள் பூந்தோட்டம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தனர். கடத்தப்பட்ட இருவரையும் சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து அன்றைய தினம் மாலை தப்பித்ததுடன், அலரி விதை உட்கொண்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் வவுனியா, சிறிராமபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
N5

Post a Comment

0 Comments