Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு


கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.இந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை.
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கருணாநிதியின் உடல்நிலையை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் ஆர்வம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு போனில் கேட்டனர்.கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது மனைவி தயாளு அம்மாள் முதன் முதறையாக கருணாநிதியைக் காண இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.201808061405477249_1_dayaluammal._L_styvpf
ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்களும் இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்தனர்.தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றதால் தி.மு.க. நிர்வாகிகளும் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய மந்திரி நிதின்கட்காரி இன்று இரவு சென்னை வருகிறார்.(15)

Post a Comment

0 Comments