Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட நாயாறுக்குச் செல்கிறார் ஜனாதிபதி!

முல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் 3 படகுகள், பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள், 8 வாடிகள் மற்றும 2 இயந்திரங்கள் உள்ளிட்ட தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் நேற்றுமுன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் நேற்று பதற்றம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவை கூட்டத்தின் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசியுள்ள ஜனாதிபதி, எதிர்வரும் 22ம் திகதி முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு இரு தரப்பினருடனும் பேசி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments