Home » » செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு - வள்ளிபுனத்தில் செஞ்சோலை இல்லத்தின் மீது விமானப்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 12ஆவது ஆண்டு நினைவு நாள், வள்ளிபுனம் இடைக்காட்டு சந்திப் பகுதியில் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள்மற்றும் பொதுமக்கள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் “ மாணவர்கள் மீது குண்டு வீசி கொலைசெய்து, ராஜபக்ஷர்கள் தங்கள் கோரமுகங்களை காட்டிய கொடூர நாள் தான், இந்தச் செஞ்சோலை நினைவு நா​ள். 10 ஆண்டுகள் கழித்துதான், அந்நாளை நினைவு கொள்கின்றோம்.
ஓர் இனப்படுகொலையை அப்பட்டமாக நிறைவேறிய இந்த நாளை மறந்துவிட முடியாது. இதனை உலகுக்கு ஆண்டு தோறும் சுட்டிக்காட்டுகின்றோம். அதனால்தான் இந்த நிகழ்வுகளை நினைவுகொள்கின்றோம். இன்று, ராஜபக்ஷக்கள் மீண்டும் அரசாட்சியைப் பிடிக்கும் நோக்கில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்த அராஜகங்கள் மறந்து போய்விடவில்லை.
மஹிந்த ஆட்சியில், நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்திருந்தால், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருப்போம். அத்துடன், எமக்கான உரித்தைப் பெற்றுக் கொள்வதில், இன்றும் சிங்களதேசம் பின்னிக்கின்றது. இதற்கான பதிலை சிங்களதேசம் எதிர்காலத்தில் அறிந்து கொள்வார்களெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
   
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |