Home » » மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம் நாளை –சிறப்பாக நடைபெற்ற கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம் நாளை –சிறப்பாக நடைபெற்ற கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர்ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றம் நாளை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு கொடியேற்றத்திற்கான கொடிச்சீலைகொண்டுவரும் நிகழ்வு மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மேளவாத்தியங்கள் முழங்க ஆடல்பாடல்களுடன் பக்தர்கள் புடைசூழழ கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி இரத உற்சவமும் 11ஆம் திகதிஆடி அமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.












Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |