Home » » எஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

எஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு



தொழிலற்ற பட்;டதாரிகளை கட்டம் கட்டமாக அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சை நிறைவுபெற்றுள்ள நிலையில், அதன் முதற்கட்டமாக, 4,100 பட்டதாரிகளுகக்கு கடந்த 20ஆம் திகதி அலரிமாளிகையில் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதன் அடுத்தகட்டமாக மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகளை இந்த வருட இறுதிக்குள் அரச சேவைக்குள் உள்வாங்குவதாகவும், எஞசியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடத்தில் நியவமனங்களை வழங்க உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அனைத்து பட்டதாரிகளுக்கு ஒரே தடவையில் தொழில்வாய்ப்பை வழங்காமைக்குரிய காரணம் தொடர்பில் இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர், அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரே தடவையில் நியமனங்களை வழங்கி, பிரதேச செயலகங்களில் அவர்களுக்கு அமர்ந்துகொள்ள கதிரைகள் இல்லாமல், அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்க அரசாங்கம் தயாரக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எனவே, பொறுத்தமான முறைமையின்கீழ் படிப்படியாக நியமனங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்;வாறு ஆட்சேர்க்கப்படும் பட்டதாரிகளை வெறுமனே அரச சேவையாளராக நியமிக்காமல், அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்திப் பணிகளின் பங்காளர்களாக்குவதற்காக அவர்கள் அனைவருக்காகவும் பல்வேறு பயிற்சிகளை வழங்க உள்ளதாகவும் பிரதமர்; ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்;ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |