Home » » களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹோற்சவம்

களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹோற்சவம்


செ.துஜியந்தன்

களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹோற்சவம் 

கிழக்கில் வரலாற் று ப் பிரசித்திபெற்ற களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவம் 02 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது  

தொடர்ந்து பத்து தினங்கள் உற்சவம் நடைபெறும் என ஆலய பொதுச்செயலாளர் க.சத்தியமோகன் தெரிவித்தார். மஹோற்சவக்குரு சிவஸ்ரீ ச.மயூரவதக புருக்கள் தலைமையில் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளது. 

இதில் 09 ஆம் திகதி வேட்டைத்திருவிழா, 10 ஆம் திகதி மாங்கனித் திருவிழா, 11 ஆம் திகதி காலை சங்காபிஷேகம், தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. 12 ஆம் திகதி இரவு பூங்காவன உற்சவம், 13 ஆம் திகதி பகல் பிராயச்சித்த அபிஷேகம், இரவு வைரவர் பூசை ஆகியன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் இற்றைக்கு கி.பி.1107ஆம் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆலயமாகும். இவ் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் ஒரு வேம்பு மரம் இருந்துள்ளது. அந்த வேம்புமரத்தடியின் கீழ் பிள்ளையார் உருவத்தைக்கொண்ட கல்லினை ஊரவர்கள் கண்டெடுத்ததாகவும் அதனை அக்காலத்தில் வாழ்ந்த மாணிக்கன் செட்டிஇ சுந்தரன் செட்டிஇ மாதவன் செட்டி என்ற மூன்று அண்ணன் தம்பிமார்கள் இருந்துள்ளனர்.

இவர்களுள் மாணிக்கம் செட்டி என்பவன் மிகுந்த தெய்வப்பற்றுக் கொண்டவனாக மிளிர்ந்தான். மாணிக்கம் செட்டியார் இங்கு கண்டெடுத்த கல்லினாலான பிள்ளையாருக்கு கொத்துப்பந்தலிட்டு தினம் பூசைகள் செய்து வழிபட்டுவந்துள்ளார். அதன் பின் களுவாஞ்சிகுடியிலுள்ள அனைத்துக்குடிமக்களும் ஒன்றாகச்சேர்ந்து ஓலைக்கிடுகினால் கோயில் கட்டிவழிபடத்தொடங்கினார்கள்.

பல வருடங்கள் கழிந்த பின்னர் ஆலய வழிபாட்டு முறைகள் விஸ்தரிக்கப்பட்டன. முறையாக பூசை செய்வதற்கென விதிமுறை தெரிந்த குருக்கள் குடியினர் தம்பட்டைஇ கோரக்களப்புஇ தம்பிலுவில் ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கேயே தங்கியிருந்து விதி முறைகளுடனாக பூசைகளை செய்து வந்தனர்.

ஓலைக்குடிசையில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 1885 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீற்றால் ஒரு செங்கற் கோயிலைக்கட்டினார்கள். இதற்கென செங்கற்கள் வெட்ட ஆலயத்தின் பின்புறமுள்ள குளத்திலிருந்து வெண்கட்டிகள் எடுத்தே கட்டினார்கள். அதற்கான தடயங்கள் இப்போதம் இங்குள்ளது. அப்போது கும்பாபிஷேகம் செய்யப்பட்டதை தமிழ் இலக்கத்தில் 'க கூ ள'  என மூலஸ்தான பெரியசுவரில் பொறித்து வைத்திருந்தார்கள்.

அதன் பின் 2004 ஆம் ஆண்டு 10 மாதம் 28 ஆம் திகத ஆலயம் புனருத்தாரனம் செய்யப்பட்டு  மஹா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் 12 ஆண்டுகளைக் கடந்த நிலையில் தற்போதைய ஆலய நிர்வாக சபையினராலும்இ பொதுமக்களினாலும் ஆலய புனரு;தாரன வேலைகள் செய்யப்ட்டு வீதிகள் விஸ்தரிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் கம்பீரமான தோற்றத்துடன் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் காட்சிதருகின்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |