Home » » கல்முனை மாநகரசபை சுகாதாரதொழிலாளர்கள் மண்ணெண்னைக்கலனுடன் மாநகர சபை முன் போராட்டம். ஆளுநரை சந்திக்கச் செல்வதால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

கல்முனை மாநகரசபை சுகாதாரதொழிலாளர்கள் மண்ணெண்னைக்கலனுடன் மாநகர சபை முன் போராட்டம். ஆளுநரை சந்திக்கச் செல்வதால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது



செ.துஜியந்தன்


கல்முனை மாநகர சபையில் சேவையாற்றும் சுகாதாரதொழிலாளர்கள் கடந்த இரு தினங்களாக கல்முனை மாநகர சபையின் முன்னால் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். நீண்டகாலமாக கல்முனை மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்காது. கிழக்குமாகாண ஆளுநரினால் புதிதாக அரசியல் நியமனங்கள் நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது. இதனைக்கண்டித்து போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


மநகர சபையின் முன்னால் ஊழியர்கள் மண்ணெண்னைக் கலனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் மாநகரசபையின் விசேட அமர்வு இன்று கூடியது. இதில் இவ் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகபேசப்பட்டது. 
மாநகர முதல்வர் தலைமையில் கூடிய அமர்வில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிழக்குமாகாண ஆளுனரினால் கல்முனை மாநகர சபைக்குவழங்கப்பட்ட10 நிரந்தரநியமனங்களையும் உடனடியாக ரத்துச்செய்யப்படவேண்டும்.
எக்காரணம் கொண்டும் அவர்களை கடமையேற்க அனுமதிப்பதில்லை.
தற்போது கல்முனை மாநகரசபையில் தற்காலிக, அமைய, மாற்றுநிலை, நிமித்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களை அவர்களின் குறிப்பிட்டசேவை மூப்பு அடிப்படையில்அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அதற்கான நேர்முகத்தேர்வின் போது அதனை கருத்தில் எடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானமும் விசேட சபையில் நிறைவேற்றப்பட்டன.
இன்று வெள்ளிக்கிழமை ஆளுனரை சந்தித்து கலந்துரையாடுவதும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அது வரை ஊழியர்களை தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பணிக்குத்திரும்புமாறு கேட்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்காலிகமாக போராட்டம் கைவிடப்படுவதுடன் இன்று வெள்ளிக்கிழமை ஆளுநரிடம் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் மீண்டும் போராட்டத்தில் குதிப்பதாக ஊழியர்கள் முடிவெடுத்துள்ளனர்.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |