Advertisement

Responsive Advertisement

கல்முனை நகரின் மத்தியில் துப்பரவு செய்யப்படாத வடிகானால் துர்நாற்றம் விசும் நிலை

செ.துஜியந்தன்

கல்முனை நகரின் மத்தியில் மக்கள் வங்கிக்கு முன்புறம் போக்குவரத்து பொலிஸார்கடமையில் ஈடுபடும் எதிரே அமைந்துள்ள கழிவு நீர் வடிந்தோடும் பெரியவடிகானில் குப்பைகள் மற்றும் மண் அடைத்து நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியிலுள்ள கடைவியாபாரிகள் போக்குவரத்துச் செய்யும் மக்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகிவருகின்றனர்.
கல்முனையில் மிக நீண்டகாலமாக அம்மன்கோவில் செல்லும் வீதி, இராமகிருஸ்ணமிசன் வித்தியாலம், வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் குறித்தவீதியில் அமைந்துள்ள வடிகான் துப்பரவு செய்யப்படாத நிலையிலுள்ளது. இவ் வடிகான் ஊடாகச் செல்லும் கழிவு நீர் கல்முனை பிரதான வீதியின் குறுக்கே ஊடறுத்துச் செல்லவேண்டும். ஆனால் இடைநடுவில் கழிவு நீர்தேங்கி நிற்கின்றது.
அத்துடன் இவ் வடிகானுள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என்பன குவிந்து கிடப்பதோடு மண் அடைத்தும் உள்ளது. இதனால் கல்முனை நகர் துர்நாற்றம் வீசும் நிலையிலும், தொற்றுநோய் ஏற்படும் வகையிலும் உள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டு:டுகின்றனர். கல்முனை மாநகர சபைக்கு கடந்தகாலங்களிலும் இவ்விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டிய போதிலும் இன்று வரை அவ் வடிகான் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போதுள்ள மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் நகரின் மத்தியில் கழிவு நீர் தேங்கிநிற்கும் வடிகானை துப்பரவு செய்து பொதுமக்களின் உடல், உள சுகாதாரத்திற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கமுன்வரவேண்டும் என கல்முனை பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

Post a Comment

0 Comments