Home » » எங்கள் நிலத்தை எங்களுக்குத்தாருங்கள் 278 குடும்பங்களும் மீளக்குடியேறும் வரை நிலமீட்பு போராட்டம் தொடரும் இன்று 14 ஆவதுநாளாக பொத்துவில் கனகர்கிராம மக்கள் போராட்டத்தில்

எங்கள் நிலத்தை எங்களுக்குத்தாருங்கள் 278 குடும்பங்களும் மீளக்குடியேறும் வரை நிலமீட்பு போராட்டம் தொடரும் இன்று 14 ஆவதுநாளாக பொத்துவில் கனகர்கிராம மக்கள் போராட்டத்தில்

செ.துஜியந்தன்

பொத்துவில் பிரதேசத்திலுள்ள கனகர்கிராம மக்கள் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பித்த எங்கள் நிலத்தை எங்களிடம் தாருங்கள் நிலமீட்பு போராட்டம் இன்று(27)  14 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
பொத்துவில் பிரதேசத்தில் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் சேனைப்பயிர் செய்துவந்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோபண்டாரநாயக்கா காலத்தில் இம் மக்களின் மேட்டுநிலப்பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஊக்குவிப்புக்களும் வழங்கப்பட்டுவந்துள்ளன. 
இந் நிலையில் 1980 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் அப்போது அமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்  கனகரெட்டணம் இம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். இவ் வீட்டுத்திட்டம் 30வீடுகள் கொண்டதாக அமைக்கப்பட்டு கனகர்கிராமமாக 1981 இல் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் 1983, 1984, 1990 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக பல்வேறு இடங்களிலும் இம் மக்கள் வாழ்ந்துள்ளனர். 
2009 இற்குப்பின்னர் தமது கிராமத்தில் மீளக்குடியேறச் சென்றவர்களை வனவிலங்குத்துறை திணைக்களம் அங்கு செல்லவிடாமல் எல்லைக்கற்களை இட்டு அது தமக்குரிய பகுதியாக பிரகடனப்படுத்தி மக்களைத் தடுத்துவருகின்றனர். கடந்த 28 வருடமாக பொறுத்துப்பார்த்த பொத்துவில் கனகர்கிராம மக்கள் தற்போது பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து நிலமீட்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக பலரிடம் முறையிட்டும் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இங்கு இருவருடங்களுக்கு முன்பு நேரடியாக வருகைதந்த அமைச்சர் சுவாமிநாதன் அம் மக்களின் காணிகளை பார்வையிட்டு தீர்வு தருவதாகச் சொல்லிச்சென்றிருந்தார். அது போல் காணி ஆணையாளரும் கனகர்கிராம மக்களின் காணியினை பார்வையிட்டு உறுதிமொip வழங்கிச்சென்றிருந்தார். அரசியல்வாதிகளும், அதிகாரிகளம் வாக்குறுதிகளை வழங்கிச்சென்ற போதிலும் இதுவரை மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படாதுள்ளது. 
தற்போது பொத்துவில் கனகர்கிராம மக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், இடையிடையே பெய்யும் மழையிலும் வீதியில் இறங்கி பகல் இரவாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது காணி தமது கைக்கு கிடைக்கும் வரையும் தற்போதுள்ள 278 குடும்பங்களையும் மீளக்குடியேற்றும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |