Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களின் வான் இயக்கச்சியில் கோர விபத்து! - இருவர் பலி - 6 பேர் படுகாயம்

இயக்கச்சி பகுதியில், ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த மகளை ஏற்றிய வந்த குடும்பத்தினர் பயணம் செய்த வானே, விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் வானில் பயணித்த 8 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த மகளும்,அவரை அழைத்து வந்த தாயுமே மரணமாகினர். யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருமே உயிரிழந்தனர். ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மின்சார சபையின் வாகனம் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே இவ்விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments