Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயிரிழந்த குட்டியை 17 நாட்கள் முதுகில் சுமந்தபடி 1,600 கி.மீ. நீந்திய தாய் திமிங்கலம்: - பாசப் போராட்டம்!

பிறந்தவுடன் உயிரிழந்த குட்டியை தாய் திமிங்கலம் தொடர்ந்து 17 நாட்கள் தனது முதுகில் சுமந்தபடி திரிந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் அண்மையில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்றது. பிறந்து சில நாட்களே ஆன இந்த குட்டி திடீரென உயிரிழந்தது. இதனால் சோகமடைந்த தாய் திமிக்கலம் குட்டியை தனது தோளில் சுமந்தபடி தொடர்ந்து 17 நாட்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளது.
இதுபற்றி ஆய்வு நடத்திய கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள், அந்த திமிங்கலம் சோகத்தில் 1600 கிலோமீட்டர் தூரத்திற்கு குட்டியை சுமந்தபடி நீந்தியதாக தெரிவித்துள்ளனர். 17 நாட்கள் வரை உயிரிழந்த குட்டியை பிரிய மனமில்லாமல் தாய் திமிங்கலம் நடத்திய இந்த பாச போராட்டம் கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments