Home » » அமைச்சரவை தீர்மானங்கள் – (14/08/2018)

அமைச்சரவை தீர்மானங்கள் – (14/08/2018)


2018.08.14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01. பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்குட்பட்ட பாதுகாப்புக் கட்டடத்தை மேம்படுத்துதல். – (நிகழ்ச்சி நிரலில் 08 ஆவது விடயம்)
பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் எதிர்புறத்தில் நுழைவாயில் அமைந்துள்ள ஜயந்திபுர பாதுகாப்புக் கட்டடத் தொகுதி மற்றும் அதன் பின்புற நுழைவாயில் அமைந்துள்ள பின்னியர பாதுகாப்பு கட்டிடத்தில்; பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை பணிகளுக்கு தேவையான புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தி புரனமைக்கப்படவுள்ளது, இதற்காக கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. 2007 ஆண்டின் 58 ஆவது இலக்க இரசாயன ஆயுத இணக்கப்பாடு தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல். (நிகழ்ச்சி நிரலிவ் 10 ஆவது விடயம்)

இரசாயன ஆயுத உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் தேசிய பாதுகாப்புக்கான விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன் 2007 ஆம் ஆண்டு இலக்கம் 58 இரசாயன ஆயுத இணக்கப்பாடு தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பாதுகாப்பு அமைச்சர் செயற்பட வேண்டும் என்பதற்காக திருத்ததை மேற்கொள்ளப்படுவதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக மேலே குறிப்பிட்பட்ட சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதற்கான திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. விகாரைகள் மற்றும் தாம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 14 ஆவது விடயம்)

நாடு முழுவதிலும் உள்ள விகாரைகள் மற்றும் அறநெறி என்ற தாம் பாடசாலைகளில் வசதிகளை மேற்படுத்தும் பொழுது முறையாகவும் செயல்திறன் மிக்கதாகவும் அவற்றுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சிபாரிசுகளுக்காக அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அமைப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை தீர்மானி;த்திருந்தது. இதற்கமைவாக விகாரைகள் மற்றும் தாம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது குறைபாடின்றி; முறையாக செயல்படும் வகையில் இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுக்கமைய நடவடிக்கை மேற்கொள்வதற்கும், அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் ஏனைய மத வழிபாட்டு நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான வசதிகளை செய்வதற்கு இந்த சிபாரிசுக்கமைய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. வரி தொடர்பில் இலங்கைக்கும் ஓமான் அரசாங்கத்திற்குமிடையில் எட்டப்படவுள்ள உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 21 ஆவது விடயம்)

இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார புரிந்துணர்வை மேம்படுத்தும் எதிர்பார்ப்புடன் வட்டி அரச தரப்பு பங்கு ஈவுத்தொகை மற்றும் கப்பல் சேவை உள்ளிட்ட விடயங்களை உள்டளக்கிய வகையில் இலங்கை மற்றும் ஓமானுக்குமிடையிலான இருதரப்பு வரிவிதிப்பு மற்றும் வரியை தவிர்ப்பதற்கான உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. 1901 ஆண்டு தொழு நோயாளர் தொடர்பான கட்டளை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 26 ஆவது விடயம்)

தொழு நோய் ஒல்லாந்தர் யுகத்தில் பரவியநோயாக பெரிடப்பட்டிருந்தது. அத்தோடு இந்த நோய்க்கான சிகிச்சை இல்லாததன் காரணமாக அது பரவுவதை தடுப்பதற்காக தொழுநோயாளர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். 1901 ஆண்டு தொழு நோய் தொடர்பான கட்;டளைச் சட்டத்தின் கீழ் தொழு நோய்க்கு உட்பட்ட நோயாளர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டது. நவீன சிகிச்சைமுறையின் காரணமாக தொழு நோயாளர்களை முழுமையாக குணப்படுத்த முடியும் என அடையாளம் காணப்பட்டது. அத்தோடு 1983 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நோயாளர்கள் ஏனையோரிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவது இடைநிறுத்தப்பட்டது. தொழுநோயாளர்கள் குணமடைந்த போதிலும் மேலே குறிப்பிடப்பட்ட கட்டளைச் சட்டத்தின் மூலம் ஏனையோரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட 31 நோயாளர்கள் ஹெந்தல மற்றும் மாந்தீவு தொழு நோயாளர் வைத்தியசாலைகளில் இருக்கின்றனர். இந்த நோயாளர்களுக்கு அவர்களது குடும்பத்துடன் தொடர்புகளை முன்னெப்படுத்தற்கு தேவையான வசதிகளை மேற்கோள்ளும் வகையில் 1901 தொழு நோயாளர் தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்காக சுகாகார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. கண்டி பல்லின போக்குவரத்து கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில் பஸ்களின் போக்குவரத்து சேவைகளை நிர்வகித்தல். (நிகழ்ச்சி நிரலில் 32 ஆவது விடயம்)

கண்டி பல்லின போக்குவரத்து கட்டமைப்பை நிர்மானிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருவதுடன் இதன் நிர்மாணப்பணிக்கான காலப்பகுதிக்குள் தடையின்றி பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும். மாநகரத்துக்குள் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்காக நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘சஹசர’வேலைத் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பஸ்போக்குவரத்;து செயற்பாட்டு கட்டமைப்பை மேம்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்பட்டுள்ளது. இதற்கமைடவாக உத்தேச தகவல் தொழில்நுட்ப நடைமுறையை மேலே குறிப்பிடப்பட்ட வகையில் உத்தேச திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. கொட்டாவ பொலிஸ் நிலையத்துக்கு காணியை சுவீகரித்தல். (நிகழ்ச்சி நிரலில் 35 ஆவது விடயம்)

அரசாங்கத்தினால் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் சுவீகரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ள 49.80 பேச் காணியில் கொட்டாவ பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்காக இந்தக் காணி பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. சாலாவ இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலை வெடித்ததினால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு வழங்குதல் – (நிகழ்ச்சி நிரலில் 41 ஆவது விடயம்)

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலை வெடித்ததினால் தனிப்பட்டவகையிலும் அசையும் சொத்துக்கள் பலவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டன. அத்தோடு அவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகள். வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பல்வேறு சொத்துக்களுக்காக செலுத்தப்படவேண்டிய இழப்பீட்டை செலுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இருப்பினும் இதில் பாதிக்கப்பட்ட அதாவது உரிய இழப்பீடு கிடைக்கப்பெறாத வாகனங்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்குவதற்காக நீர்ப்பாசன மற்றும் நீரியல் வள மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு புதிய இடவசதியை பெற்றுக் கொடுத்தல் – (நிகழ்ச்சி நிரலில் 43 ஆவது விடயம்)

சுமார் 170 பணியாளர்கள் மற்றும் இந்த அலுவலகத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட 12 நிருவகங்கள் மூலமான சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தரும் கலைஞர்களுக்கும் ஏனையோருக்கும் வசதிகளை செய்துகொடுப்பதற்காக பத்தரமுல்ல செத்சிறிபாய கட்டிடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார அலுவல்கள் திணைக்களம் கொண்டுள்ள இடவசதி போதுமானதல்ல என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் இதற்கு முக்கியமாக ஆட்பதிவு திணைக்களத்தினால் முன்னெக்கப்பட்டுவரும் கெப்பிட்டிபோல மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடத் பகுகுதியில் கலாசார அலுவலகள் திணைக்களம் அமைக்கப்படவுள்ளது. இதனால் இந்த கட்டிடப் பகுதி கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. வட மாகாணத்தில் பேண்;தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 44 ஆவது விடயம்)

கடற்றொழில் துறைமுகம், நங்கூரம் இடும் பகுதியை அமைத்தல் மற்றும் அபிவிருத்திச் செய்தல் நீர் உயிரின உற்பத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களைக் கொண்ட வட மாகாண பேண்தகு அபிவிருத்தித் திட்டம் 2018 ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் முன்னெடுக்கப்படவுள்ளது. இக் காலப் பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்கு உடன்பட்டுள்ள 174 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிர்வாரண தொகையுடன் திட்டத்தை நடைமுறைப்டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த திட்டத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு 27.22 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த தொகையை ஒதுக்கீடு செய்வதற்காக கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சரும் கிராமிய பொருளாதார அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா அவர்கள் சம்ர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் இழப்பீட்டை அறவீடு செய்வதற்கான திருத்த சட்டமூலம். ( நிகழ்ச்சி நிரலில் 50 ஆவது விடயம்)

நபர் ஒருவரின் குற்றவியல் செயற்பாட்டினால் அல்லது அவ்வாறு இல்லையாயின் செய்ய வேண்டியவற்றை மேற்கொள்ளாதிருத்தல் அல்லது பின்வாங்குதல் அல்லது தவிர்த்தல் அல்லது எவராவது ஒரு நபரின் மரணம் இடம் பெறுவது தொடர்பில் அதற்கான இழப்பீட்டை அறவிடுதல் அல்லது மற்றும் அதுதொடர்பில் வேறு விடயத்துக்காக ஒழங்குகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபரின் தடையை நீக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் இதற்கான அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பாடசாலை மாணவர்களுக்கு ஒரு சோடி சப்பாத்துக்களை வழங்குதல். – (நிகழ்ச்சி நிரலில் 52 ஆவது விடயம்)

பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளில் 6 இலட்சத்தி 48 ஆயிரத்தி 151 மாணவர்களுக்கு சப்பாத்துக்களை கொள்வதனவு செய்வதற்காக அன்பளிப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டம் ஒன்று 2017 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக தமது விருப்பதற்கு அமைவாக பொருத்தமான ஒரு சோடி பாதணியை கொள்வனவு செய்வதற்கு இந்த மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அத்தோடு இதன் மூலம் இந்த மாணவர்களின் பெற்றோருக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மையும் கிடைப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் 2018 ஆம் ஆண்டிலும் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. அரசியல் பழிவாங்கல் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு இழப்பீட்டை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 55 ஆவது விடயம்)

அரசியல் பழிவாங்கல் காரணமாக உயிரிழந்த மற்றும் ஏனைய இடையூறுகளினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்காக நஷ்ட ஈட்டை வழங்குவதற்கென இழப்பீட்டை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சிபாரிசுக்கமைய நஷ்டஈடு வழங்கக்கப்படவுள்ளது, இதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்கும் இந்த இழப்பீட்டை 2019 ஆம் ஆண்டில் செலுத்தி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள அவர்களும் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. தேசிய தொழில் பாதுகாப்பு வாரம் 2018 (நிகழ்ச்சி நிரலில் 56 ஆவது விடயம்)

இந்த ஆண்டில் தேசிய தொழில்பாதுகாப்பு வாரம் அக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இக்காலப்பகுதியில் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிககளை நாடு முழுவதிலும் நடத்தவதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் கீழ் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெவுள்ளது. அத்தோடு இந்த வார காலப் பகுதி தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆற்றல் விருது விழா தேசிய மட்டத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்காக தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் பிரிவில் பண பரிமாறல் சேவையை முன்னெடுப்பதற்காக கேள்வி மனு கோரல். (நிகழ்ச்சி நிரலில் 59 ஆவது விடயம்)

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் நிதி மற்றும் வெளிநாட்டு நாணயத் தேவையை இலகுவாக பூர்த்தி செய்யும் வகையில் விமானத்திற்கான வெளியேறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் நிதி பரிமாற்லுக்கான கருமபீடங்களின் எண்ணிக்கையை 6 ஆக அதிகரிப்பதற்கும் 2019 ஆண்டிலிருந்து தொடர்ந்து இந்த சேவை முன்னெடுப்பதற்காக இலங்கை மத்திய வங்யினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்படவுள்ளன. இதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சிவ்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. ரயில் குறுக்குப் பாதை பாதுகாப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 61 ஆவது விடயம்)
இலங்கையில் 1337 ரயில் குறுக்குப் பாதைகள் அமைந்துள்ளதுடன் இவற்றில் 520 பாதுகாப்பு கட்டமைப்பு நடைமுறையில் உண்டு. இதற்கு மேலதிகமாக 400 ரயில் குறுக்குப் பாதைகளில் பாதுகாப்பு கட்டமைப்புக்கான உபகரணங்களை பொருத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 417 ரயில் குறுக்குப் பாதைகளில் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் பொருத்துதல் நடைமுறைப்படுத்துவதற்காக பண உதவியை பெற்றுக் கொடுப்பதற்கு அங்கேரிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கேரிய அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள M/S MUSZER AUTOMATIK _ LTD  என்ற நிறுவனத்திடமிருந்து பரிந்துரையைக் கோருவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. அம்பத்தலை நீர் விநியோக கட்டமைப்பை மேற்படுத்துதல் மற்றும் மின்சக்தியை சேமிப்பதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 63 ஆவது விடயம்)
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் நிதி உதவியினால் மேற்கொள்ளப்படும் பெருநகர் கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் அம்பத்தலை நீர் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் எரிசக்தியை சேமிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பில் குழாய்களை செப்பனிடுதல் மற்றும் மறுசீரமைத்தல் உபகரணங்களை பொருத்துதல் முதலான நடவடிக்கைகளுக்காக தன்னியக்க கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல், மற்றும் 8000 மீற்றர் – கொள்வனவு நீர்;த்தேக்கத்தை நிர்மாணித்தல் முதலான பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்தை வகுப்பதற்கும் இந்த நிர்மாணப்பணிக்களுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவில் சிபாரிசுக்கமைய M/ S. ZONGNAN – SZSG JH JV   என்ற நிறுவனத்துக்கு வழங்குவதற்காக நகர திட்டமிடல் மற்றும் நிர்வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. தூய்மைப்படுத்திய பெற்ரோலியம் தயாரிப்பை கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 67 ஆவது விடயம்)
அனுகூலமான எரிபொருள் தொகையை முன்னெடுக்கும் நோக்கில் 2018 செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 திகதி வரையான பத்துமாத காலப் பகுதிகள் (10) சுவீகரிக்கப்பட்ட எரிபொருள் தயாரிப்பை கொள்வனவு செய்வதற்காக நீண்ட கால இரு ஒப்பந்தங்களை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கமைய ஐக்கிய அரபு எமிரேட் இராஜ்யத்தின் MS GULF Petrochem FZC என்ற நிறுவனத்திடமிருந்து எரிபொருள் தயாரிப்புகளை கொள்வனவு செய்வதற்காக கொள்வனவு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. மெஹேவரபியச கட்டிடத் தொகுதி பராமறித்தல் அதன் பணிகளை பொருத்தமான நிறுவனம் மூலம் நிறைவேற்றிக் கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)
சேவையாளர்களுக்கு மிகவும் சிறந்த மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்கும் நோக்கில் தொழில் அமைச்சும் அதன் – கீழ் நடைமுறைப்படுத்தும் அனைத்து நிறுவனங்களையும் ஒரே கட்டிடத் தொகுதியில் அமைப்பதற்காக மெஹேவர பியேச என்ற பெயரில் 32 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இவ்வாறான கட்டிடம் ஒன்றை உரிய முறையில் பராமரிப்பதற்காக பயிற்சிவிக்கப்பட்ட பணியாளர் சபை தொடர்பில் உள்ள வரையறையின் காரணமாக இந்த கட்டிடத் தொகுதியின் பராமரிப்பு நடவடிக்கைகளை தகுதி பெற்ற வெளி நிறுவனங்களின் மூலம் மேற்கொள்வதற்காக தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. விசா அனுமதியைப் பெற்றுக்கொள்வதிலிருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் ஓமான் அரசாங்கங்களுக்கிடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 69 ஆவது விடயம்)
இராஜ தந்திர விசேட சேவை மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு கொண்டுள்ள நபர்களுக்கு விசா அனுமதியை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பது தொடர்பான இலங்கை மற்றும் ஓமான் நாட்டுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல்மாகாண அமைச்சர் எஸ். பி. நாவின்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. இலங்கை சுற்றுலா பயணிகள் மத்தியில் கவரக்கூடிய கிராமம் ஒன்றை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 72 ஆவது விடயம்)

பிரிட்டன் ஜேர்மன். பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுலா பயணிகள் மத்தியில் இலங்கையை கவரக் கூடிய கிராமமாக மேம்படுத்துவதற்காக டிஜிட்டர் பிரசார வேலைத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைவாக இந்த ஒவ்வொரு நாடுகளிலும் விசேட டிஜிட்டல் பிரசார வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் கொள்வனவு செயற்பாடுகளின் கீழான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக பிரிட்டனில் டிஜிட்டல் பிரசார வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக டிஜிட்டல் இஸ்பிரிங் லிமிட்;டடிடம் 703 480 அமெரிக்க டொலர்களுக்கும் ஜெர்மனியில் டிஜிட்டல் பிரசார வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக மீடியா கன்சல்ட்ன்ட் இன்டர்நெஷனல் ஹோல்டிங்ஸ் ஏஜி என்ற நிறுவனத்துக்கு 697 720.92 அமெரிக்க டோலர்களுக்கு வழங்குவதற்கும் பிரான்ஸில் டிஜிட்டல் பிராசார வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இன்டர்பேஸ் டுவரிசம் என்ற நிறுவனத்துக்கு 706 460 அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கும் சுற்றுலா தொழில்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவலகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. அரச துறையில் சம்பள மதிப்பீடுகளை மேற்கொள்வது தொடர்பில் விசேட ஆணைக்குழுவை நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 73 ஆவது விடயம்)

சமீபகாலமாக அரச சேவையில் பல்வேறு சேவை குழுவினரால் தமது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்துக் கொள்வதற்காக தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். இதேபோன்று பொருளாதாரத்துக்கும் ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டு அரச துறையில் தற்போது நிலவும் சம்பள கட்டமைப்பு குறித்து கவனம் செலுத்தி அனைத்து அரச சேவைத் துறையில் நிலவும் சம்பளம் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்வது காலத்தின் தேவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு விரைவாக தீர்வை கண்டறிவதற்காக ஒவ்வொரு துறையிலும் தெளிவு மற்றும் அனுபவம் கொண்ட விசேட ஆணைக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதில் ரயில் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டை திருத்தல் ஆணைக்குழுவின் ஒரு விடயம் தொடர்பான பரிந்துரையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்போழுது நடைமுறைப்படுத்தப்படும் தேசிய சம்பளம் மற்றும் சேவை ஊழியர் தொடர்பான புள்ளிவிபர ஆணைக்குழுவினருக்கும் மேலதிகமாக சம்பள மதிப்பீட்டுக்கான விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்காக மேதகு ஜனாதிபதி கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |