Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்களின் புகைத்தல் மது எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

 எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமூக வலுவுட்டல் அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையில் ”நாளைய தலைமுறையை போதையற்ற சமூதாயமாய் உருவாக்குவோம் ” எனும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்திருந்த புகைத்தல் மது எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று ( 3 ) இடம்பெற்றது.
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி அதிபர் , பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள்  பட்டிருப்பு , களுவாஞ்சிகுடி பிரதான வீதி வழியாக வந்த பேரணியும் ,  எருவில் கண்ணகிபுரம்
வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியும் , ஒந்தாச்சிமடம் வினாயகர் வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் முன்னால் இணைந்து கொண்டன.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில்  இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் , பிரதேச செயலக கணக்காளர் , பிரதேச சபை செயலாளர் , பிரதேச  சபை உத்தியோஸ்தர்கள் , பிரதேச செயலக உத்தயோஸ்தர்கள் , பிரதி திட்ட பணிப்பாளர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவு , சமுதாய அடிப்படையிலான வங்கிகள் , பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது பொதுமக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ,புதுக்குடியிருப்பு கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த வீதி நாடகம் மற்றும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவி பீ.லிசாகரியின்  உரையும் அனைவரினதும் பாராட்டைப் பெற்றது 

Post a Comment

0 Comments