செ.துஜியந்தன்
பாண்டிருப்பு திருவள்ளவர் சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பில் நடத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர்கள் மற்றும் சிறுவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
திருவள்ளுவர் சமூக ஒன்றியத்தின் தலைவர் பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலத்தின் சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ். சந்திரகுமார், பாண்டிருப்பு மகாவித்தியால அதிபர் எஸ்.புனிதன், கிராமசேவகர் துரைராஜசிங்கம், அகரம் அமைப்பின் தலைவர் செ.துஜியந்தன், பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் தலைவர் எஸ்.மனோகரன், சமூகசேவகர் தாமோதரம் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
இங்கு பாண்டிருப்பு பிரதேசத்தில் நடனக்கலையில் சிறந்து விளங்கும் ஆர்.வி. எஸ். புவனன், ஒவியக் கலைஞர் கே. சுதர்சன், திருவள்ளுவர் சமூக ஒன்றியத்தினால் நடத்தப்படும் நடன நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சிறுவர்கள் பரிசுவழங்கி பாராட்டப்பட்டனர். அத்துடன் திருவள்ளுவர் சமூக ஒன்றியத்தின் இலட்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
0 Comments