செ.துஜியந்தன்
முதற்கட்டமாக 1500 பேர் காட்டுக்குள் உட்பிரவேசித்தள்ளனர்.
இம்முறை வடக்குக் கிழக்குப் பகுதியில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையில் ஈடுபட்டுவருகின்றனர். கதிர்காமம் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தீர்த்தோற்சவம் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கதிர்காமம் திருத்தலத்தை நோக்கி அதிகமான பக்தர்கள் கால்நடையாக செலகின்றனர். வடக்கில் இருந்து கடந்த மே மாதம 17 ஆம் திகதி ஆரம்பமான வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக் குழுவினர் உட்பட
கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக இணைந்து சென்ற பாதயாத்திரைக்குழுவினர்கள் பலர் உகந்தைமலை முருகன் ஆலயவளாகத்தில் கடந்தசில நாட்களாக தங்கியிருந்தனர்.
.
இந்நிலையில் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று 4 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலைவேளையில் உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டது. முதல் நாள் 1500 பக்தர்;கள் காட்டுக்குள் பிரவேசிதததாக உகந்தை மலை வண்ணக்கர் திசநாயக்க சுதுநிலமே தெரிவித்தார். தொடர்ந்து 20 தினங்கள் திறந்திருக்கும் காட்டுப்பாதை ஜீலை 24 ஆம் திகதி மூடப்படவுள்ளது.
காட்டுவழிப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்ளும் அடியார்களின் நலன்கருதி குடிநீர், சுகாதாரம் உட்படஅனைத்து வசதிகளையும் இராணுவத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களம், பிரதேசசபைகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்
காட்டுக்குள் பிரவேசிக்கும் யாத்திரீகள் அனைவரும் எக்காரணம் கொண்டும் காட்டுக்குள் பொலித்தீன் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். கடந்த காலங்களில் காடுகளில் பொலித்தீன் கொண்டுசென்றதினால் அங்குள்ள வன விலங்குகள் அதனால் பாதிக்கப்பட்டிருந்தன. இதனைக்கருத்தில் கொண்டு பொலித்தீன் பாவனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 25 ஆயிரம் பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் சென்றுள்ளனர். இம் முறையும் கதிர்காமம் செல்பவர்களின் கணக்கெடுப்பு ஒன்று குமண சரணாலயப்பகுதியில் நடைபெறவுள்ளது. இவ் வருடம் அதிகளவிலான பக்தர்கள் காட்டுப்பாதையூடாக கதிர்காமம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Comments