Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விஜயகலாவின் கருத்தினால் நாடாளுமன்றத்தில் குழப்பம்! - நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கோரிக்கை

விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று நாடாளுமன்றில் குழப்ப நிலமை ஏற்பட்டதுடன், சபையும் ஒத்தி வைக்கப்பட்டது.
விஜயகலாவைப் பதவி நீக்குமாறு எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பரித்தனர். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் கருஜயசூரிய சபையில் தெரிவித்திருந்தார். அத்துடன், அமைச்சரின் கருத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தில் அரசியலமைப்பையே அல்லது தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தையே மீறும் விதமான கருத்துக்கள் ஏதாவது இருப்பின் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு சட்ட மா அதிபரிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments