Advertisement

Responsive Advertisement

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை ஏற்கமாட்டோம்! - மனோ கணேசனுக்கு சம்பந்தன் பதில்


தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், இதன் போது எமது நீண்டகால கொள்கையின் படி மக்களுக்கு உரியவை கிடைக்கும் வரை மற்றும் மக்களின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் வரை நாங்கள் அமைச்சு பதவிகளை பெறுவதில் எவ்வித பயனும் இல்லை என இரா.சம்பந்தன் கூறினார்.

Post a Comment

0 Comments