Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிளிநொச்சியில் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது


கிளிநொச்சி அம்பலாங்குளத்தில் சிறுத்தை புலி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அம்பலாங்குளத்தை சேர்ந்த 42 வயதுடைய நடராசா மோகன் ராசா நேற்று இரவு கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் உதய நகரை சேர்ந்த நடராசா சுகுமார் இன்று காலை பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். புலி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ பதிவுகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

Post a Comment

0 Comments