Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு உட்பட 8 மாவட்டங்களில் டெங்கு நோய் வெகுவாகப் பரவி வருகின்றது மக்களே ! அவதானம் !!!!

பருவப் பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நோய் அதிகமாக பரவிவருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த டெங்கு நோயால் 8 மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு,கண்டி,கம்பஹா,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,கல்முனை,புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோயார்கள் அதிகளவு இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இம்மாதம் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் உயிரை பறிக்கும் டெங்கு நுளம்பு உருவாகும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மக்கள் மற்றும் அனைவருக்குமான எச்சரிக்கை ! அதிவேகமாகப் பரவிவரும் உயிர்கொல்லி நோய் !

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka

Post a Comment

0 Comments