ஓட்டுசுட்டானில் கிளைமோர் மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடைகளை கொண்டுசென்றபோது கைதுசெய்யப்பட்டவர்களுக்கும் இராணுவப்புலனாய்வாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையே ஊர் மக்களும் முன்னர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பிலான விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் 4 பேரும் நேற்று மாலை ஒருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஒட்டுசுட்டான் பகுதியில்இருந்து முச்சக்கர வண்டி ஒன்று அதிகாலை வேளை புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த போது ஒட்டுசுட்டான் பேராற்று பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டியினை சோதனை செய்துள்ளார்கள். இதன்போது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் இருவர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
நேற்று முன்தினம் முச்சக்கர வண்டியினை சோதனை செய்தபோது அதில் 15கிலோகிராம் நிறையுடைய கிளைமோர் ஒன்று அதனை இயக்க பயன்படுத்தப்படும் ரிமோட்கள் ரவைகள் கைக்குண்டு புலிக்கொடி ஒன்று விடுதலைப்புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டது .


0 Comments