தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , துரைரட்ணசிங்கம் ஆகியோரிடம் தமது எம் பி பதவியை ராஜினாமா செய்யும் கடிதங்களை பெறுமாறு தமிழரசு கட்சியின் செயலாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது கிடைத்த போனஸ் ஆசனங்களை அரைவாசி காலத்துக்கு பகிருவது என்ற அடிப்படையிலேயே இவ்விருவருக்கும் எம் பி பதவிகள் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments