Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கிறார் மைத்திரி! - வடக்கு மாகாணசபையில் குற்றச்சாட்டு

அம்பாறை- திருக்கோவிலில் ஆலய கும்பாபிஷேக விழாவின் போது தங்க நகைகளை திருடிய நான்கு பெண்கள் உள்ளிட்ட ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் மஹாகும்பாபிஷேக தினமான திங்கட்கிழமை திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சிவில் உடையில் பக்தர்களோடு பக்தர்களாக நடமாடிய போது நகைகளை திருடிய சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தாலிக்கொடிகள், மாலைகள் உட்பட 21 பவுண் தங்க நகைகள் மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ளதுடன் இவர்கள் பல பிரதேசங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இவர்களுடன் தொடர்புடைய ஏனைவர்களையும் கைது செய்யும் நோக்குடன் திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments